ஆர்வலர் மீது குற்றச்சாட்டு

ஆர்வலர் மீது குற்றச்சாட்டு

1 mins read
0afa8535-98bd-443c-9caf-43b652511a5a
-

அனு­மதி இல்­லா­மல் பொது இடத்­தில் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­தாக கில்­பர்ட் கோ (படம்) என்ற உள்ளூர் ஆர்­வ­லர் மீது நேற்று குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

இந்த 60 வயது ஆட­வர், மே 1ஆம் தேதி காலாங் ரோட்­டில் இருக்­கும் குடி­நு­ழைவு, சோதனைச்­ சா­வடி ஆணை­யக் கட்­ட­டம் அருகே ஒரு பதா­கை­யு­டன் ஆர்ப்பாட்­டம் நடத்­தி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

'இந்­தி­யா­வில் இருந்து வரும் எல்லா விமா­னங்­க­ளை­யும் அன்­பு­ கூர்ந்து தடை செய்­யுங்­கள். நாங்­கள் இன­வாதி அல்ல. இது வெறும் எச்­ச­ரிக்­கை­தான்' என்று அந்­தப் பதாகை தெரி­வித்­தது.

அத்­த­கைய ஆர்ப்­பாட்­டத்தை நடத்த அவர் அனு­மதி பெற­வில்லை என்று காவல்­துறை தெரி­வித்­தது. பிடோக் போலிஸ் பிரிவு தலை­மைய­கத்­தில் காவல்­து­றை­யி­டம் மே 11ஆம் தேதி தான் தாக்கல் செய்த வாக்­கு­மூலத்தில் கையெழுத்­திட கோ மறுத்து­விட்­ட­தா­க­வும் நேற்று அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

இத­னி­டையே, கில்­பர்ட் கோ வழக்­க­றி­ஞரை அமர்த்தி விசா­ரணை கோரு­வார் என்று நேற்று தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ருக்கு $5,000 பிணை அனும­திக்­கப்­பட்டது. வழக்கு ஜன­வரி 7ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.