வசதியான, இலேசான உள்ளூர் முழங்கால் வலுக்காப்புச் சாதனம்

1 mins read
8708a811-04ac-413f-885c-ff75dfe0e7cf
-

உள்­ளூர் பொறி­யி­யல் நிறு­வ­னம், முழங்­கால் அறு­வை­சி­கிச்சை வல்­லு­நர்­கள், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக முப்­ப­ரி­மாண அச்­சுத்­துறை வல்­லு­நர்­கள் சேர்ந்து இலேசான, வசதியான, ஆற்­ற­ல் மிக்க முழங்­கால் வலுக்­காப்­புச் சாத­னத்தை உரு­வாக்கியுள்ளனர்.

பொது­வாக முழங்­கால் மூட்­டில் ஏற்­ப­டக்­கூ­டிய சுமை­யைப் போக்க முதி­யோ­ருக்­கு அந்தச் சாதனம் பரிந்­துரைக்­கப்­ப­டு­கிறது.

முழங்­கால் மூட்­டில் அறு­வை­ சி­கிச்சை செய்துகொண்டு இருப்­போ­ருக்கு அத்­த­கைய சாத­னம் பெரும் உத­வி­யாக இருக்­கும்.

வழக்­க­மான முழங்­கால் வலுக்­காப்­புச் சாத­னம் ஏறத்­தாழ 1 கிலோ­எடை இருக்­கும். அது, குறிப்­பிட்ட கோணத்­திற்கு மேல் முழங்­காலை அசைக்க முடி­யா­த­படி தடுக்­கும்.

ஆனால் இப்­போது உரு­வாக்­கப்­பட்டு உள்ள 'எக்ஸ்-பிரேஸ்' என்ற முழங்­கால் வலுக்­காப்­புச் சாத­னம் இலேசா­ன­தாக, காலை நீட்டி மடக்­குவதில் பெரும் உதவி யாக இருக்­கும். குறிப்­பாக எழுந்து நிற்­ப­தில் சிர­மத்தை எதிர்­நோக்­கு­வோ­ருக்கு, மாடிப்­ப­டி­யில் ஏற சிர­மப்­ப­டு­வோ­ருக்கு இது பெரிதும் உத­வும் என்று எலும்­பியல் நிலை­யத்­தைச் சேர்ந்த டாக்­டர் ஜெஃப்ரி சியூ தெரி­வித்­தார்.

அந்­தச் சாத­னம் விரை­வில் சந்­தைக்கு வரும். அது $1,000 விலை இருக்­கும் என்று தெரிகிறது.