சூப்பர் பூமாவுக்கு பதில் ஆற்றல் மிகு புதிய ஹெலிகாப்டர்

சூப்பர் பூமாவுக்கு பதில் ஆற்றல் மிகு புதிய ஹெலிகாப்டர்

1 mins read
0cb0cc65-f2bf-4a13-9801-53c0d52fc3c7
-

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை நேற்று அதன் ஆகப்புதிய எச்225எம் ரக ஹெலி­காப்­ட­ரின் ஆற்­றல்­க­ளை காட்­சிப்­ப­டுத்­தி­யது.

அந்த ஹெலி­காப்­டர், சூப்­பர் பூமா ஹெலி­காப்­ட­ரை­விட அதிக எடை­யைச் சுமந்து செல்­லும். அதிக நேரம் பறக்­கும். நீண்­ட­காலத்­திற்­குச் சேவை­யாற்­றும். புதிய ஹெலி­காப்­டர், சூப்­பர் பூமா வுக்கு பதில் சேவை­யில் ஈடு­படும்.

மனி­தா­பி­மான உத­வி­கள், பேரிடர் நிவா­ர­ணப் பணி­கள் முதல் தேடுதல், மீட்­புப் பணி­கள் வரை பல­தரப்­பட்ட சவால்­மிக்க பணி­களில் திறம்­பட ஈடு­படும் வகை­யில் புதிய ஹெலி­காப்­டர் மிக­வும் ஆற்­றல் வாய்ந்­த­தாக இருக்­கும்.

செம்­ப­வாங் விமா­னத் தளத்­தில் நேற்று எச்225எம் ஹெலி­காப்­ட­ரில் தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஹெங் சீ ஹாவ் பறந்து சென்று பார்த்­தார்.

ஏர்­பஸ் நிறு­வ­னம் எச்225எம் ஹெலி­காப்­டர்­களை உரு­வாக்­கு­கிறது. இந்த ஹெலி­காப்­ட­ரில் 20 பேருக்­கும் அதிக வீரர்­கள் செல்­ல­லாம். மருத்­துவ ஆத­ர­வு­டன் கூடிய 11 படுக்­கை­க­ளுக்கு இட­முண்டு. 4,750 கிலோ எடை­யுள்ள சரக்­கு­களை ஏற்­றிச் செல்­லும்.

சூப்­பர் பூமா ஹெலி­காப்­டர்­களை­விட ஏறத்­தாழ 20% அதி­க­மாக 400க்கும் அதிக கடல்­மைல் தூரம் பறக்­கக்­கூ­டிய ஆற்­றலும் இதற்கு உண்டு.