1,500க்கும் அதிகமான அட்டைப்பெட்டி கள்ள சிகரெட்டுகள் சிக்கின; சீன நாட்டு ஆடவர் கைது

1,500க்கும் அதிகமான அட்டைப்பெட்டி கள்ள சிகரெட்டுகள் சிக்கின; சீன நாட்டு ஆடவர் கைது

2 mins read
aea256e0-3ffc-419d-8efa-7be67e6466ea
மொத்தம் 1,513 அட்டைப் பெட்டிகளில் இருந்த கள்ள சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை -

ஆறு குளி­ரூட்­டும் சாத­னங்­களில் 1,500க்கும் மேற்­பட்ட அட்­டைப்பெட்டி­களில் மறைத்­து­ வைக்­கப்­பட்டு இருந்த கள்ள சிக­ரெட்­டு­களை சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

செம்­ப­வாங்­கில் இருக்­கும் கெம்­பாஸ் கிர­செண்ட் பகு­தி­யில் அதி­கா­ரி­கள் டிசம்­பர் 8ஆம் தேதி மேற்­கொண்ட சோத­னை­யில் 39 வயது ஆட­வர் ஒரு­வர் கைதா­ன­தாக சுங்­கத்­துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

சீன நாட்­ட­வ­ரான அந்த ஆட­வர், சேமிப்புக் கிடங்கு ஒன்­றில் இருந்து சரக்­கு­க­ளைப் பெற்று அவற்றை வாக­னம் ஒன்­றில் ஏற்­றி­யதை அதி­கா­ரி­கள் கண்­ட­னர். அந்த டிரக் வாக­னம் சிங்­கப்­பூ­ரில் பதி­யப்­பட்­ட­தா­கும்.

அதி­கா­ரி­கள் அந்த வாக­னத்தை அணுகி சோதனை செய்த­தில், குளி­ரூட்­டும் சாத­னங்­களில் 1,512 அட்­டைப் பெட்டிகளில் கள்ள சிக­ரெட்­டு­கள் மறைத்து வைக்­கப்­பட்டு இருந்­தது தெரியவந்­தது.

அந்­தச் சரக்கு சீனா­வில் இருந்து வந்­தது என்­பது புலன்­வி­சா­ரணை மூலம் தெரி­ய­வந்­தது.

தொடர்ந்து அந்த ஆட­வ­ரின் வசிப்­பி­டத்­தில் சோதனையிட்டதில் மேலும் ஒரு பெட்டி கள்ள சிகரெட்டும் ஒன்­பது டப்பா சிக­ரெட்­டு­களும் அகப்­பட்­ட­தாக சுங்கத்­துறை கூறியது.

கள்ள சிக­ரெட்­டுக்­குச் செலுத்த வேண்­டிய தீர்வை $129,280. ஜிஎஸ்டி வரி $10,370. வாக­னம் உட்பட அனைத்­தும் கைப்­பற்­றப்­பட்­டன.

கைதான ஆட­வ­ருக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வடிக்கை தொடங்கி இருப்­ப­தாக சுங்­கத்­துறை தெரி­வித்­தது.

கள்ள சிக­ரெட்டை வாங்­கு­வது, விற்­பது, கொண்டு செல்­வது, கொண்டு கொடுப்­பது, கிடங்­கு­களில் சேர்த்து வைப்­பது எல்­லாம் சுங்­கத்­துறை மற்­றும் ஜிஎஸ்டி சட்­டத்­தின்­கீழ் கடு­மை­யான குற்­றச்­செயல்­க­ளா­கக் கரு­தப்­பட்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று இந்­தத் துறை எச்­ச­ரித்­துள்­ளது.