அடுத்த இரு வாரங்களுக்கு மழையும் காற்றும் குறையும்

அடுத்த இரு வாரங்களுக்கு மழையும் காற்றும் குறையும்

1 mins read
31612f50-a338-4563-b26b-0c82ee15ce81
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்வது குறையும். என்றாலும், பெரும்பாலான நாள்களில் பிற்பகல் வேளையில் குறுகிய நேரம் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

வடமேற்கு அல்லது வடகிழக்குப் பகுதியிலிருந்து காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது பொதுவாக வலுவிழந்து வீசக்கூடும். கடந்த இரு வாரங்களுடன் ஒப்புநோக்க, அடுத்த இரு வாரங்களில் காற்று வீசும் நாள்கள் குறைவாகவே இருக்கும் என முன்னுரைக்கப்படுகிறது.

சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை (டிசம்பர் 16) இதனைத் தெரிவித்தது.

பெரும்பாலான நாள்களில் வெப்பநிலை 24 டிகிரி செல்சியசுக்கும் 33 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டு இருக்கும். ஒரு சில நாள்களில் வெப்பநிலை 34 டிகிரி செல்சியசை எட்டக்கூடும். மழை பெய்யும் சில நாள்களில் வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியசாக குறையலாம்.

கடந்த இரு வாரங்களாக காற்று சற்று பலமாக வீசியது.

அட்மிரல்டியில் டிசம்பர் 13ஆம் தேதி ஆக அதிகமாக மணிக்கு 68.3 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

வெப்பநிலையைப் பொறுத்தவரை, தெங்காவில் டிசம்பர் 1ஆம் தேதி ஆக அதிகமாக 34.8 டிகிரி செல்சியசாக பதிவானது.