அமைதியாக வேலை செய்ய தற்காலிகக் கூடங்கள்

அமைதியாக வேலை செய்ய தற்காலிகக் கூடங்கள்

1 mins read
1ae91733-140a-4ef9-9a82-254790fe9d5a
சத்தம், தொந்தரவு இல்லாமல் வேலை செய்ய இந்தக் கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தீவு முழுவதும் உள்ள கடைத் தொகுதி களில் சுமார் 80 கூடங்களை அமைத்து இருப்பதாக சுவிட்ச் நிறுவனம் தெரிவித்து உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீடு அல்­லது அலு­வ­ல­கத்­துக்கு வெளியே அமை­தி­யான இடத்­தில் வேலை செய்ய விரும்­பு­வோ­ருக்கு தற்­கா­லி­கக் கூடங்­கள் நிறு­வப்­பட்­டுள்­ளன.

கிள­மெண்டி அவென்யூ 4ல் புளோக் '331பி'யில் உள்ள டிரிவெ லிஸ் குடி­யி­ருப்­பா­ளர் நிலை­யத்­தி­லும் புக்­கிட் தீமா சமூக மன்­றத் திலும் இந்­தத் தற்­கா­லி­கக் கூடங்­கள் அமைக்­கப்­பட்டு உள்­ளன.

இந்­தக் கூடங்­களை வாட­கைக்கு எடுத்­துப் பயன்­ப­டுத்­த­மு­டி­யும். ஒரு­வர் அம­ரும் கூடத்­திற்கு வாடகை, மணிக்கு $2.40. நால்­வர் அம­ரும் கூடத்­திற்­கான வாடகை மணிக்கு $4.80.

கூடத்­தில் ஒட்­டப்­பட்­டுள்ள கியூ­ஆர் குறி­யீட்டை 'Switch' செயலி மூலம் வருடி கூடத்­தைப் பயன்­ப­டுத்­தத் தொடங்­க­லாம். தற்­போது முன்­ப­திவுக்கு அனு­மதி இல்லை.

ஹாலந்து-புக்­கிட் தீமா குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிம் ஆன், வீட்­டில் இருந்து வேலை செய்­வது இன்­னும் சிறிது காலத்­திற்கு நீடிக்­கும். இந்த நிலை­யில் அக்­கம்­பக்­கத்­தில் நடை பெறும் புதுப்­பிப்புப் பணி­கள், கட்­டு­மா­னப் பணி­கள் போன்­ற­வற்­றால் ஏற்­படும் சத்­தம் வேலை செய்­யும்­போதும் தொலை­பே­சி­யில் பேசும்­போதும் இடை­யூ­றாக இருக்­கும்," என்­றார்.

"அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட புதுப்­பிப்பு பணி­களை 'OneService செயலி மூலம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தெரி­விக்­கும் நட­வ­டிக்­கைக்கு இந்த முன்­னோ­டித் திட்­டம் உறு­து­ணை­யாக இருக்­கும் என்­றும் அவர் சொன்னார்.

"சமூ­கத்­திற்கு சேவை­யாற்­றும் வகை­யில் இந்­தக் கூடங்­கள் கட்டுப்ப­டி­யா­கக்­கூ­டிய விலை­யில் வேலை செய்ய உகந்த சூழ்­ நிலையை கூடங்­கள் வழங்­கு­கின்­றன," என்று 'சுவிட்ச்' நிறுவனத் தின் உதவி தலை­வர் டேவிட் சாவோ குறிப்­பிட்­டார்.