தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய வகை செயற்கை கோழி இறைச்சியை விற்க அனுமதி

2 mins read
6361f383-cbfc-4d2c-80db-c706a9894450
-

மாற்று புர­தச்­சத்து உணவை விரும்பு­வோ­ருக்கு உற்­சா­க­ம­ளிக்­கும் வகை­யில் மேலும் செயற்கை கோழி இறைச்சி வகை­களை விற்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆண்டு உல­கி­லேயே முதல் நாடாக விலங்­கு­க­ளின் உயி­ர­ணுக்­களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட இறைச்­சியை விற்க சிங்­கப்­பூர் அனு­மதி வழங்­கி­யது.

கலி­ஃபோர்­னி­யா­வைச் சேர்ந்­த ­வ­ரின் 'ஈட் ஜஸ்ட்ஸ் குட் மீட்' (Eat Just's Good Meat) என்ற புதிய நிறு­வ­னம், சோத­னைச் சாலை­யில் தயா­ரிக்­கப்­பட்ட 'சிக்­கன் நக்­கட்ஸ்' துண்­டு­களை விற்க அனு­மதி கேட்டது. அதற்கு கடந்த டிசம்­பர் மாதம் சிங்­கப்­பூர் உணவு அமைப்பு ஒப்­பு­தல் வழங்கியது.

இந்நிலை­யில் கோழி மார்­புத் துண்டு உள்­ளிட்ட இறைச்­சி வகையை அடுத்த ஆண்டில் இருந்து விற்க அந்­நி­று­வ­னத்­துக்கு நேற்று அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அடுத்த வாரம் ஜேடபிள்யூ மேரியட் சிங்­கப்­பூர் சவுத் ஹோட்­ட­லில் புதிய இறைச்­சியை சுவைத்­துப் பார்க்­கும் நிகழ்ச்சி நடை­பெ­று­கிறது. இதை­ய­டுத்து கோழி மார்­புத் துண்­டு­கள் அடுத்த ஆண்டு விற்­ப­னைக்கு வரும்.

தியோங் பாரு­வில் உள்ள கரி ரைஸ், லூஸ் ஹைனா­னிஸ், சில ஈரச்­சந்தை கடை­கள் உட்­பட பல உண­வ­கங்­க­ளுக்கு இந்த இறைச்சி விநி­யோ­கிக்­கப்­ப­ட­வி­ருக்­கிறது.

உயி­ரணு இறைச்சி உற்­பத்­தியை மேலும் அதி­க­ரிக்­க­வும் 'குட் மீட்' கடப்­பாடு கொண்­டுள்­ளது.

இதற்­காக, தயா­ரிப்­புச் சாத­னங்­களிலும் உப­க­ர­ணங்­களிலும் அது முத­லீடு செய்­கிறது.

"பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் முதல் குடி­மக்­க­ளுக்­கான ஒழுங்­கு­முறை கட்­ட­மைப்பு வரை விவே­க­மான, நீடித்த உணவு முறை­யில் உல­கி­லேயே சிங்கப்பூர் முன்­னோக்­கிச் சிந்­திக்­கும் நாடு," என்று 'குட் மீட்' பேச்­சா­ளர் ஒரு­வர் பாராட்­டி­னார். முன்பு விற்­கப்­பட்ட சிக்­கன் நக்­கட்­சுக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­தா­க­ அவர் சொன்­னார்.