யூனோஸ் பலதுறை மருந்தகம் இன்று திறப்பு

யூனோஸ் பலதுறை மருந்தகம் இன்று திறப்பு

1 mins read
3932588e-e05a-410f-88ec-41bd79c71732
யூனோஸில் அமைந்து உள்ள புதிய பலதுறை மருந்தகத்தில் தொழில் நுட்பத்துடன் வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.படம்: சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்கள் -

யூனோ­ஸில் புதி­தா­கக் கட்­டப்பட்­டுள்ள பல­துறை மருந்­த­கம் இன்று முதல் செயல்­ப­ட­வி­ருக்­கிறது.

சிங்­ஹெல்த் பல­துறை மருந்த கங்­களில் இது, 9வது மருந்தக மாகும்.

யூனோஸ் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லி­ருந்து பத்து நிமிட தொலை­வில் எண் 1 சின் செங் அவென்யூ வில் புதிய மருந்­த­கம் அமைந்­துள்­ளது.

நாள்­பட்ட நோய்­க­ளுக்­கும் இங்கு வெளி­நோ­யாளி சிகிச்சை அளிக்­கப்படும். ஊடு­க­திர் வச­தி­களும் மருந்­த­கத்­தில் செய்யப்பட்டுள்ளன.

புதிய மருந்­த­கத்தில் பெண்­கள் மற்றும் குழந்­தை­க­ளுக்கு சுகா­தார சேவை­கள், குழந்தைகளுக்கான நோய்த் தடுப்பு ஊசிகள், பரி­சோ­த­னை­கள், பல் சிகிச்சை உள்­ளிட்ட சேவை­களும் வழங்கப்படும் என்று நேற்று சிங்­ஹெல்த் பல­துறை மருந்­த­கங்­கள் அமைப்பு தனது அறிக்கையில் தெரி­வித்­தது.

மருந்­த­கத்­தில் புகுத்தப்பட்டுள்ள நவீன தொழில்­நுட்­பங்­கள் நோயாளி­ க­ளுக்கு மேம்­பட்ட வசதிகளை வழங்கும்.

உதா­ர­ண­மாக, மருத்­து­வர் பரிந்­து­ரைக்­கும் சீட்­டு­கள் தானா­கவே இரண்­டா­வது மாடி­யில் உள்ள மருந்து வழங்­கும் இடத்­துக்கு வந்து­ வி­டும். நோயா­ளி­கள் சுய­மாக முன்­ ப­திவு செய்­ய­வும் கட்­ட­ணங்­கள் செலுத்­த­வும் சாத­னங்­கள் வைக்கப்­ பட்­டுள்­ளன. யூனோஸின் பலதுறை மருந்தகத்துடன் சேர்த்து சிங்கப் பூரில் மொத்தம் 23 பலதுறை மருந்த கங்கள் உள்ளன.