செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
88d630b1-a167-482c-8bc9-642bf047a6e3
-

சரக்கு விமானங்களை

வாங்குகிறது எஸ்ஐஏ

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தன்னிடமுள்ள போயிங் 747-400F சரக்கு விமானங்களுக்குப் பதிலாக எரிசக்தி சேமிக்கக்கூடிய ஏர்பஸ் A350F விமானங்களை வாங்கவிருக்கிறது.

பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து மொத்தம் ஏழு ஏர்பஸ் A350F சரக்கு விமானங்களை வாங்குவதற்கான விருப்பக் கடிதத்தில் எஸ்ஐஏ கையெழுத்திட்டுள்ளது. புதிய விமானங்களை விநியோகிக்கும் பணி 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் தொடங்கும். இதனால் பரந்த அகலமான சரக்கு விமானங்களை பயன்படுத்தும் முதல் நிறுவனமாக எஸ்ஐஏ இருக்கும்.

என்டியுவின் புதிய பள்ளி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம், வேதியியல், ரசாயனப் பொறியியல், உயிர்தொழில்நுட்பப் பள்ளியை புதிதாக திறக்கிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இப்பள்ளியில் மாணவர்கள் ேசர்த்துக் கொள்ளப்படுவர். பொறியியல், அறிவியல் கல்லூரிகளின் கூட்டு முயற்சியில் பல பிரிவுகள் இணைக்கப்பட்டு

புதிய பள்ளி தொடங்கப்பட்டுள்ளது.

'என்டியு 2025' எனும் உத்திபூர்வ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக என்டியு தெரிவித்தது.

சுற்றுச் சூழல் சேவை

ஊழியர்களுக்கு விருது

சுற்றுச் சூழல் துறையில் சிறந்த சேவை ஆற்றிய

27 பேருக்கு நேற்று விருது வழங்கப்பட்டது. தேசிய சுற்றுப்புற வாரியம் ஏற்பாடு செய்த இவ்விருது நிகழ்ச்சியில் கழிவு நிர்வாகம், துப்புரவு சேவை, பூச்சி மருந்து நிர்வாகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். 27 பேருக்கும் தலா நூறு வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், சுற்றுச் சூழலைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 2021ஆம் ஆண்டு சிரமமான ஆண்டு என்று குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தது. கொள்ளைநோய் பின்னணியில் ஊழியர்கள் சோர்வு அடைந்தனர் என்றார் அவர்.

துப்புரவுத் துறைக்கு அடுத்ததாக விரைவில் கழிவு நிர்வாகத் துறையிலும் படிப்படியாக உயரும் சம்பள முறை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. இதனால் ஊழியர்கள் திறன்கள் மேம்பட்டு சம்பளம் அதிகரிக்கும் என்று டாக்டர் டான் சொன்னார்.