முதலீட்டுத் திட்டம் ஒன்றைப் பற்றி தம் தாயார் திருவாட்டி சோஃபியா கூறியபோது, அதில் ஏதோ சூது இருப்பதாக சந்தேகப்பட்டார் திருவாட்டி ஓங். இது வேண்டாம் என்று தாயாரை அவர் எச்சரித்தும் வர்த்தகரான திருவாட்டி சோஃபியா மோசடியில் சிக்கி, $568,000ஐ இழந்தார். சீனாவைச் சேர்ந்த ஆடவருக்கு ஐந்து மாதங்களாக அவர் பணம் அனுப்பி வந்தார். அந்த ஆடவர் மீது திருவாட்டி சோஃபியா அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகக் கூறப்பட்டது. தாம் ஏமாந்ததை உணர்ந்த திருவாட்டி சோஃபியா, பின்னர் காவலர்களிடம் புகார் அளித்தார். விசாரணை நடந்து வருகிறது.
மகள் சொல் கேளாமல் மோசடியில் $568,000ஐ இழந்தார்
1 mins read
-

