அனைத்துலக சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் லீ

அனைத்துலக சமூகத்திற்கு நன்றி தெரிவித்தார் பிரதமர் லீ

2 mins read
5c0f7d99-af5d-4be4-8716-63b5626875f5
-

கொவிட்-19 கொள்­ளை­நோய் வாட்டி வதைத்த சிர­ம­மான கால­கட்­டத்­தில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இங்­குள்ள அனைத்­து­லக சமூ­கத்­தி­னர் தோள் கொடுத்­த­தாக பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

பய­ணக் கட்­டுப்­பா­டு­கள், குடும்­பங்­க­ளைப் பிரிந்­தி­ருத்­தல் எனக் கொள்­ளை­நோ­யால் அதே அனைத்­து­லக சமூ­கத்­திற்­கும் சிர­மங்­கள் பல இருந்தன என்­றார் அவர்.

அழுத்­தம் தரும் இச்­சூ­ழ­லில் பொரு­ளி­யல் நிச்­ச­ய­மற்ற நிலை­யால் உள்­ளூர்­வா­சி­க­ளுக்­கும் வெளி­நாட்டி­ன­ருக்­கும் கவலை உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரின் முதல் அனைத்­து­ல­கப் பள்­ளி­யா­கத் திறக்­கப்­பட்ட 'யுனை­டெட் வோர்ல்டு காலேஜ் ஆஃப் சவுத் ஈஸ்ட் ஏஷியா'வின் 50வது ஆண்டு நிறைவு விழா­வில், பதி­வு­செய்­யப்­பட்ட காணொளி வழி தோன்றி பிர­த­மர் லீ இத­னைக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இப்­பள்­ளி­யில் தற்­போது நூற்­றுக்­கும் மேற்­பட்ட நாடு­க­ளைச் சேர்ந்த 5,600 மாண­வர்­கள் டோவர், தெம்­ப­னிஸ் வளா­கங்­களில் பயில்­கின்­ற­னர். 1971ல் 'சிங்­கப்­பூர் இண்­டர்­நே­ஷ­னல் ஸ்கூல்' என்ற பெய­ரில் முதல் பிர­த­மர் லீ குவான் இயூ பள்­ளி­யைத் திறந்து வைத்­தார்.

நாட்­டின் பொரு­ளி­ய­லுக்­கும் சமு­தா­யத்­திற்­கும் பங்­க­ளித்­துள்ள சிங்­கப்­பூ­ரின் அனைத்­து­லக சமூ­கத்­திற்கு நேற்று பிர­த­மர் லீ நன்றி தெரி­வித்­த­து­டன் அவர்­கள் தொடர்ந்து சிங்­கப்­பூ­ரில் வர­வேற்­கப்­ப­டு­வ­தா­க­வும் மதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

பள்­ளி­யின் வெற்­றி­யு­டன் சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சி­யும் மேம்­பா­டும் பின்­னிப் பிணைந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் திறக்­கப்­பட்­ட­தால் அனைத்­து­லக இயக்­க­மாக பள்ளி மாற முடிந்­தது என்­றார் நிகழ்­வில் பேசிய பள்­ளி­யின் தலை­வ­ரும் முன்­னாள் பிரிட்­டிஷ் தூத­ரு­மான கார்மா எல்­லி­யட்.

அனைத்துலகமயம், புரிந்­து­ணர்வு இரண்­டை­யும் நாடு­க­ளுக்­கி­டையே ஊக்­கு­விப்­ப­தை­யும் வளர்ப்­ப­தை­யும் பள்ளி அதன் இலக்­கு­களில் ஒன்­றா­கக் கொண்­டுள்­ளது என்று அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழிடம் தெரிவித்தார்.