2,150 விதிமீறல்கள், 6 பணி நிறுத்த ஆணைகள்

2,150 விதிமீறல்கள், 6 பணி நிறுத்த ஆணைகள்

2 mins read
10b689cd-a042-42fe-ac86-f6bafe386c07
அனுமதிக்கப்பட்ட எடையைக் காட்டிலும் அதிக எடையைத்தூக்குவதற்காக ஃபோர்க்லிஃப்ட் பாரந்தூக்கியின் பின்னால் கூடுதல்பாரத்தை வைத்தது விதிமீறலாகும். படம்: மனிதவள அமைச்சு -

போக்குவரத்துச் சாதனங்களாலும் வேலையிடத்தில் உயிர்ச்சேதம்

கடந்த பல ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் பதி­வா­கும் உயிர்க்­கொல்லி வேலை­யிட விபத்­து­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துச் சாத­னங்­களும் முக்­கியக் கார­ண­மா­கத் திகழ்­கின்­றன.

இந்­நி­லை­யில், மனி­த­வள அமைச்சு அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் போக்­கு­வ­ரத்­துச் சாதனங்­க­ளின் பாது­காப்பு தொடர்­பில் அம­லாக்­கச் சோதனை நட­வடிக்­கையை மேற்­கொண்­டது.

வேலை­யி­டத்­தில் போக்­கு­வ­ரத்­தின் நிர்­வா­கம் மற்­றும் வாக­னங்­களை இயக்­கு­வது தொடர்­பாக அமைச்­சின் அதி­கா­ரி­கள் சோதனை­யிட்­ட­னர்.

போக்­கு­வ­ரத்து மற்­றும் சரக்­குச் சேமிப்பு, உற்­பத்தி, கட்­டு­மா­னத் துறை­க­ள் என மொத்­தம் 730 வேலை­யி­டங்­களில் சோதனை நட­வடிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 2,150 விதி­மீ­றல்­கள் இந்­ந­ட­வ­டிக்கை வழி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அத்­து­டன் ஆறு தரப்பு­களுக்­குப் பணி நிறுத்த ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.

சாத­னங்­களை இயக்­கும் சாவியை முறை­யாக நிர்­வ­கிக்­க­வும் அதன் பயன்­பாட்­டைக் கட்­டுப்­படுத்­த­வும் தவ­றி­யது, வேலை­யி­டத்­தில் வாக­னங்­க­ளை­யும் சாத­னங்­களை­யும் நகர்த்­து­வதை முறை­யாக நிர்­வ­கிக்­கத் தவ­றி­யது, வாக­னங்­கள் அல்­லது சாத­னங்­க­ளின் முறை­யான பரா­ம­ரிப்பை உறு­தி­செய்­யத் தவ­றி­யது போன்­றவை அதி­க­மா­கக் காணப்­பட்ட விதி­மீ­றல்­க­ளாக இருந்­தன.

ஊழி­யர்­க­ளின் பாது­காப்பே முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­றி­ருக்க, இத்­த­கைய விதி­மீ­றல்­க­ளால் அவர்­களின் பாது­காப்­பும் சுகா­தா­ர­மும் அபா­ய­க­ர­மான நிலை­யில் உள்­ள­தாக அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் சுட்­டிக்­காட்­டி­யது.

வேலை­யி­டங்­களில் வாக­னங்­களின் பாது­காப்­பான பயன்­பாட்டை அனைத்து முத­லா­ளி­களும் உறுதி­செய்ய வேண்­டும் என்று அது அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

வாக­னங்­கள் அல்­லது சாத­னங்­க­ளின் பயன்­பாட்­டின்­போது ஏற்­ப­டக்­கூ­டிய அபா­யங்­க­ளைக் கண்­ட­றிய முறை­யான மதிப்­பீடு செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றும் கூறப்­பட்­டது.

முறை­யான போக்­கு­வ­ரத்து நிர்­வா­கத் திட்­டங்­களை வகுத்து அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­தல், அனைத்து வாக­னங்­கள் மற்­றும் சாத­னங்­க­ளின் பரா­ம­ரிப்பை அடிக்­கடி மேற்­கொள்­வ­து­டன் அதை ஒழுங்­கா­கச் செய்­தல், வாக­னங்­களை­யும் சாத­னங்­க­ளை­யும் இயக்­கு­வ­தற்கு முறை­யா­கப் பயிற்சி பெற்ற அல்­லது சான்­றி­தழ் பெற்ற ஊழி­யர்­களே அனு­ம­தித்தல் ஆகி­ய­வற்றை அமைச்சு வலி­யு­றுத்­தி­யது.