அதிகாரிகள் நேற்று முன்தினம் சிராங்கூன் வட்டாரத்தில் நடத்திய அதிரடிச் சோதனை நடவடிக்கையில் 2 கிலோ போதைப்பொருள் சிக்கியதாக மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது.
சிராங்கூன் அவென்யு 4ல் உள்ள ஒரு வீட்டில் 37 வயது சிங்கப்பூரர் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர். கிட்டத்தட்ட 44 கிராம் ஹெராயின் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் அவ்வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.
அதே வட்டாரத்தில் நிறுத்தப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து சுமார் 1.8 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
நேற்று காலை அதே வட்டாரத்தில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனை நடவடிக்கையில் 59 வயது சிங்கப்பூரர் ஒருவர் சிக்கினார். ஆடவரிடம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.