முதலாளிகளுக்கு வருமான உதவித்தொகைத் திட்டம்

2 mins read
4529abd2-e487-4167-b2ee-873079d5c720
-

முத­லா­ளி­க­ளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­தில் வரு­மான உத­வித்­தொகை வழங்­கப்­படும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதற்குத் தகுதி பெற தங்­கள் ஊழி­யர்­

க­ளுக்குச் செலுத்த வேண்­டிய

மத்­திய சேம­நி­தி சந்தாவை அவர்­கள் அடுத்த மாதம் 14ஆம் தேதிக்­குள் செலுத்­தி­விட வேண்­டும் என்று நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரி­வித்­தன.

வர்த்­தக உரு­மாற்­ற முயற்­சி­களில் ஈடுபடும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் கிடைத்த லாபத்தை ஊழி­யர்­

க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள முனை­யும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் ஆத­ரவு வழங்­கும் நோக்­கில் அர­சாங்­கம் எடுக்­கும் முயற்­சி­களில் இந்த வரு­மான உத­வித்­தொகை திட்­ட­மும் ஒன்று. மத்­திய சேம­நிதி பங்­க­ளிப்பு­ க­ளைப் பெறும் சிங்­கப்­பூர் குடி

­யு­ரிமை பெற்ற ஊழி­யர்­கள் இந்த வரு­மான உத­வித்­தொகை திட்­டத்­துக்­குத் தகுதி பெறு­கின்­ற­னர். முழு­நேர, பகு­தி­நேர, மணி­நேர அடிப்­ப­டை­யில் வேலை செய்­யும் சிங்­கப்­பூ­ர் ஊழி­யர்­களும் இதில் அடங்­கு­வர்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யின்­போது இது­வரை 2 பில்­லி­யன் வெளிக்­கும் அதி­க­மான வரு­மான உத­வித்­தொகை வழங்­கீ­டு­கள் முத­லா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இவ்­வாண்டு மார்ச் மாதத்­தில் 98,000க்கும் அதி­க­மான முத­லா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட $940 மில்­லி­யன் வரு­மான உத­வித்­தொகை வழங்­கீ­டு­களும் இதில் அடங்­கும்.

2019ஆம் ஆண்டு சம்­பள உயர்­வுக்­காக கடந்த ஆண்டு 95,000க்கும் அதி­க­மான முத­லா­ளி­க­ளுக்கு ஒரு பில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான வரு­மான உத­வித்­தொகை வழங்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் வரு­டாந்­திர வழங்­கீட்­டுத் தொகைக்கு மேலாக ஜூன் மாதத்­தில் கூடு­தல் வழங்­கீடு வழங்­கப்­பட்­டது. அடுத்த ஆண்­டுக்­கான வழங்­கீட்­டுத் தொகை­யைப் பெற இவ்­வாண்­டி­லும் கடந்த ஆண்­டி­லும் 2019ஆம் ஆண்­டி­லும் வழங்­கப்­பட்­டுள்ள சம்­பள உயர்­வு­கள் தகுதி பெறும். அடுத்த மார்ச் மாதம் வழங்­கப்­படும் வழங்­கீட்­டுத் தொகைக்­குத் தகுதி பெற மொத்த மாதச் சம்­ப­ள­மாக $5,000 வரை ஈட்­டும் சிங்­கப்­பூர் ஊழி­யர்­க­ளுக்கு இவ்­வாண்­டில் குறைந்­தது $50 சம்­பள உயர்வை முத­லா­ளி­கள் கொடுத்­தி­ருக்க வேண்­டும்.

அத்­து­டன்/அல்­லது 2019ஆம் ஆண்­டி­லும் கடந்த ஆண்­டி­லும் அல்­லது இவ்­விரு ஆண்­டு­களில் ஏதா­வது ஒன்­றில் குறைந்­தது $50 சம்­பள உயர்வு வழங்­கி­யி­ருக்க வேண்­டும். பேநவ் கார்ப்­ப­ரேட் அல்­லது ஜைரோ முறைப்­படி முத­லா­ளி­கள் பதிவு செய்­துள்ள வங்­கிக் கணக்­கில் வழங்­கீட்­டுத் தொகை அடுத்த மார்ச் மாதம் போடப்­படும். பேநவ் கார்ப்­ப­ரேட் கணக்கை அல்­லது ஜைரோ கணக்கை இன்­னும் பதிவு செய்­யாத முத­லா­ளி­கள் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் இறு­திக்­குள் பதிவு செய்­து­வி­டும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். அப்­போ­து­தான் அடுத்த மார்ச் மாதத்­தில் அவர்­க­ளுக்கு வழங்­கீட்­டுத் தொகை கிடைக்­கும். சம்ப உயர்­வுக்கு ஆத­ரவு வழங்­கும் வரு­மான உத­வித்­தொ­கைத் திட்­டம் 2013ஆம் ஆண்­டில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. முத­லில் மூன்­றாண்­டுத் திட்­ட­மாக அது அறி­விக்­கப்­பட்­டது. பிறகு கடந்த ஆண்டு வரை அது நீட்­டிக்­கப்­பட்­டது.