தத்ரூபமான சூழலைக் காட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் உள்ளூர் கதைநூல்

புதிய உள்­ளூர் கதைப்­புத்­த­கம் ஒன்றை வாசிக்­கும் சிறா­ருக்கு ஒலி, ஒளி அனு­ப­வங்­க­ளைத் தர தத்ரூபமான சூழலைக் காட்டும் (Augmented Reality) தொழில்­நுட்­பம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. அத்­

து­டன் கையில் இருக்­கும் நூல் வாசித்து காட்­டப்­படும்.

இந்­தப் புதிய அணு­கு­மு­றை­யைப் பயன்­ப­டுத்­தும் 'மை ஃபேவரட் டேஸ்' எனும் தலைப்பு கொண்ட சிறு­வர் கதைப்­புத்­த­கம் நேற்று

மத்­திய பொது நூல­கத்­தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­தக் கதை­நூலை லாப நோக்­க­மற்ற அமைப்­பான டச் சமூகச் சேவை­கள், அறி­வார்ந்த தேசம் மற்­றும் மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம், தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான மேட்டா, புத்­தாக்க தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான மெஷ் மைண்ட்ஸ் ஆகி­யவை இணைந்து உரு­வாக்­கின.

கதை­நூ­லில் உள்ள படங்­களை இல்லோ பிக்டோ எனும் நிறு­வ­னம் வரைந்­தது.

ஒரு சிறு­மி­யும் அவ­ளது தாத்­தா­வும் சிங்­கப்­பூ­ரில் உள்ள பல்­வேறு இடங்­க­ளுக்­குச் செல்­வதே இந்த நூல் சொல்­லும் கதை.

அத்­து­டன் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு வாழ்­வின் தரத்தை எவ்­வாறு மேம்­ப­டுத்­த­லாம் என்­பதை கதை­நூல் கோடிட்­டுக் காட்­டு­கிறது.

நூலில் உள்ள ஐந்து காட்­சி­கள் கேலிச்­சித்­தி­ர­மா­கக் காட்­டப்­ப­டு­கின்­றன. கேலிச்­சித்­தி­ரத்­தைப் பார்க்க அந்­தந்த பக்­கங்­களில் உள்ள கியூ­ஆர் குறி­யீட்டை வாச­கர்­கள் வருடலாம்.

அதை­ய­டுத்து, தங்­கள் ஃபேஸ்புக் பக்­கம் வழி­யாக கேலிச்­சித்­தி­ரத்தை அவர்­கள் கண்டு களிக்­க­லாம்.

கதை­நூ­லின் அறி­முக விழா­வில் அறி­வார்ந்த தேசம் மற்­றும் இணை­யப் பாது­காப்­புக்­குத் தலைமை தாங்­கும் அமைச்­ச­ரான ஜோச­ஃபின் டியோ கலந்­து­கொண்­டார்.

ஒரு­வ­ரின் கற்­றல் அனு­ப­வத்­துக்கு வாசிப்பு தொடர்ந்து முக்­கிய அடித்­த­ள­மாக இருக்­கிறது என்­றார் அவர்.

"புதிய தலை­மு­றை­யி­ன­ரின் தேவை­கள், ஆர்­வங்­கள், ஈடு­பாடு ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப கதைப்­புத்­தக வாசிப்­பும் உரு­மாற்­றம் கண்டு புதுப்­பிக்­கப்­ப­டு­வ­தைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது," என்­றார் தொடர்பு, தக­வல் அமைச்­ச­ரு­மான ஜோச­ஃபின் டியோ.

கதை­நூல் அறி­முக விழா­வில் தத்ரூபமான சூழலைக் காட்டும் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு நூல் வாசித்து காட்­டப்­பட்­டது.

இதில் சிறு­வர்­கள், பெற்­றோர் என 18 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

தத்ரூபமான சூழலைக் காட்டும் தொழில்­நுட்­பத்­தைக் கொண்டு தொழில்­நுட்­பத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி சிறு­வர்­க­ளுக்கு விளக்க எடுக்­கப்­பட்­டுள்ள முயற்சி

பாராட்­டுக்­கு­ரி­யது என்று நிகழ்­வில் கலந்­து­கொண்ட பெற்­றோ­ரில் ஒரு­வ­ரான 37 வயது சப்­ரினா வாஹிட் கூறி­னார். இந்த நூலை நூல­கங்­

க­ளி­லி­ருந்து இர­வல் வாங்­க­லாம். இந்­நூ­லின் 2,400 பிர­தி­கள்

சிங்­கப்­பூ­ர் எங்­கும் உள்ள பாலர் பள்­ளி­கள், தொடக்­கப்­பள்­ளி­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யப்­படும். 19,500 பிர­தி­கள் குறைந்த, நடுத்­தர வரு­மா­னக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த பிள்­ளை­க­ளுக்கு வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!