சிங்கப்பூரில் ஏழு பேருந்து நிறுத்தங்கள் நகரத் தோட்டங்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் நடுப்பகுதிக்குள் உள்ளூர் அறுநிறுவனத்துக்காக அவை 100 கிலோவுக்கும் அதிகமான காய்கறிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கத்துக்குச் சொந்தமான ஜிஐசி அமைப்பு தெரிவித்தது.
ஜிஐசி அமைப்பும் 'கார்டன்ஸ் வித் பர்பஸ்' எனும் உள்ளூர் விவசாயப் பள்ளியும் இணைந்து இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
ஜிஐசி அமைப்பின் 40வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
'கார்டன்ஸ் வித் பர்பஸ்' பள்ளிக்குச் சொந்தமான பண்ணையிலிருந்து எடுக்கப்பட்ட விதைகள், புதிய நகரத்தோட்டங்களில் விதைக்கப்பட்டன.
அறுவடைக்குத் தயாராகும் வரை அந்தக் காய்கறிகள் அங்கு வளரும்.
ஒவ்வொரு வாரமும் 50 தோட்டக்கலை ஆர்வலர்களைக் கொண்ட குழு, காய்கறிகள் நன்கு வளர தேவையானவற்றைச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு வார இறுதியிலும் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு பேருந்து நிறுத்தங்களில் உள்ள நகரத்தோட்டங்களிலிருந்து அற
நிறுவனத்துக்குச் சொந்தமான
'வில்லிங் ஹார்ட்ஸ்' சமைய
லறைக்கு விநியோகிக்கப்படும்.
இந்த அறநிறுவன சமையலறை ஒவ்வொரு நாளும் சிங்கப்பூரில் உள்ள வசதி குறைந்தோருக்காக 9,500 உணவுப் பொட்டலங்களைத் தயார் செய்து விநியோகிக்கிறது.
காய்கறிகள் அறுவடை செய்யப்பட்ட பிறகு புதிய காய்கறிகள் பயிரிடப்படும்.
நீடித்த நிலைத்தன்மை உள்ள உணவு உற்பத்தி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஆள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிறுத்தங்களில் நகரத்தோட்டங்கள் அமைக்கப்பட்டதாக ஜிஐசி அமைப்பு தெரிவித்தது.
என்யுஸ் புக்கிட் தீமா வளாகம், கோல்ட் ஸ்டோரேஜ் ஜெலிட்டாவுக்கு எதிர்ப்புறம், சிஎச்ஐஜே காத்தோங் கான்வென்ட், ஃபு லு ஷோ கடைத்தொகுதி, செயிண்ட் ஜான் தலைமையகம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி, பென்கூலன் எம்ஆர்டி நிலையத்தின் 'ஏ' நுழைவாயில் ஆகிய இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நகரத்தோட்டங்கள் அமைக்கப்
பட்டுள்ளன.

