மறுசீரமைக்கப்படும் தெம்பனிஸ் அவென்யூ 12

மறுசீரமைக்கப்படும் தெம்பனிஸ் அவென்யூ 12

1 mins read
fa034dec-d0a3-4922-8d7b-1c3ab97c7e9a
தெம்பனிஸ் அவென்யூ 12ல் மறுசீரமைக்கப்படும் பகுதி தெம்பனிஸ் நார்த் டிரைவ் 2 உடன் இணைக்கப்படும். படம்: கூகல் மேப்ஸ் -

தெம்பனிஸ் நார்த் வட்டாரத்தில் கட்டப்படும் நான்கு பிடிஓ திட்டங்களில் வசிக்க இருக்கும் குடியிருப்பாளர்களுக்கு வசதியாக தெம்பனிஸ் அவென்யூ 12ல் உள்ள ஒரு பகுதி இம்மாதம் 22ஆம் தேதியிலிருந்து மறுசீரமைக்கப்படும்.

இம்மாதம் 22ஆம் தேதியன்று அந்தச் சாலைப் பகுதி நிரந்தரமாக மூடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் கூறியது.

மறுசீரமைக்கப்படும் பகுதி தெம்பனிஸ் நார்த் டிரைவ் 2 உடன் இணைக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டது.