'அக்ரா'வின் புதிய பரிந்துரை

'அக்ரா'வின் புதிய பரிந்துரை

2 mins read
7ce11416-c7ec-4ae0-9c7e-5533d40a0297
-

வணிகப் பதிவேடுகளில் தனிநபர்களுக்கான கூடுதல் தரவு தனியுரிமை

கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தால் (அக்ரா) முன்­மொ­ழி­யப்­பட்ட மாற்­றங்­கள் நடைமுறைக்கு வந்தால், தொழிலில் ஈடுபட்டுள்ள, அனைத்து தனி­நபர்­களின் முழு அடை­யாள அட்டை எண்­கள், அவர்­க­ளின் குடி­யி­ருப்பு முக­வ­ரி­கள் ஆகி­யவை இனி பொது­மக்­களுக்­குக் கிடைக்­காது.

தற்­போது இது­போன்ற தக­வல்­கள் அக்­ரா­வின் நிறு­வ­னங்­கள் மற்­றும் வர்த்த­கங்­க­ளின் பதி­வே­டு­களில் காணப்­ப­டு­கின்­றன. முன்­மொ­ழி­யப்­பட்ட திருத்­தங்­கள் பெரு­நி­று­வன வெளிப்­ப­டைத்­தன்மை, தனிப்­பட்ட தரவு தனி­யுரிமை ஆகி­ய­வற்­றுக்கு இடையே சம­நி­லையை ஏற்­ப­டுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளன என்று அக்ரா கூறி­யது

பதி­வே­டு­களில் உள்ளவர்களின் அடை­யாள எண்­க­ளை­யும் ஓர­ளவு மறைக்­க­வும், பொது­மக்­க­ளுக்­குக் காண்­பிக்­கப்­படும் அவர்­க­ளின் செயல்பாட்டு முக­வ­ரி­யாக "தொடர்பு முக­வ­ரியை" அறி­மு­கப்­ப­டுத்­த­வும் இது முன்­மொழி­கிறது.

பிற முன்­மொ­ழி­யப்­பட்ட மாற்­றங்­கள் தரவு துல்­லி­யம், தாக்­கல் செய்­யும் வச­தியை மேம்­ப­டுத்­து­வதையும் நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளன. குறிப்­பிட்ட அர­சாங்க அமைப்­பு­களி­ட­மி­ருந்து தர­வைப் பெறு­வ­தற்கு அக்­ரா­வுக்கு அதி­கா­ரம் அளிக் கின்றன. தற்­போது முதல் அடுத்த ஆண்டு ஜன­வரி 28ஆம் தேதி வரை முன்­மொ­ழி­யப்­பட்ட திருத்­தங்­கள் குறித்து பொது­மக்­கள் கருத்­து­கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன.

சிங்­கப்­பூ­ரில் நம்­ப­க­மான, துடிப்­பான வர்த்த­கச் சூழலை வளர்ப்­ப­தற்­கான அதன் சட்­டங்­க­ளைத் தொடர்ந்து மதிப்­பாய்வு செய்ய பொது­மக்­க­ளின் கருத்­தை நாடுவ தாக அக்ரா கூறி­யது.

அதன் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, நிறு வனத்தில் உள்­ள­வர்­கள், பங்­கு­தாரர்­க­ளின் மின்­னஞ்­சல் முக­வ­ரி­கள், கைபேசி எண்­களை வழங்க வேண்­டும். மேலும் வர்த்தக நிறு­வ­னங்­கள் தங்­கள் வர்த்தக மின்­னஞ்­சல் முக­வரி­களை வழங்க வேண்­டும். அக்­ரா­வின் பிற முன்­மொ­ழி­யப்­பட்ட திருத்­தங்­கள் அழைப்­பாணை­களை வழங்­கு­வ­தற்­கான செயல்­மு­றை­களை ஒழுங்­கு­ப­டுத்­து­வதை நோக்­க­மா­கக் கொண்­டுள்­ளன மற்றும்் அழைப்பாணைக்கு இணங்குவதை எளி­தாக்­கு­கின்றன.

acra_public_consultation@acra.gov.sg எனும் அக்­ரா­வின் இணை­யத்­த­ளத்­தி­லும், www.reach.gov.sg எனும் அர­சாங்க கருத்­த­றி­யும் பிரி­வின் இணை­யத் தளத்­தி­லும் பொது­மக்­கள் பரிந்துரைத் தொகுப்பைப் பெறுவதுடன், தங்கள் கருத்துகளையும் பதிவுசெய்யலாம்.