மின்வர்த்தக தளங்களிலிருந்து 2,900 சட்டவிரோதப் பொருட்கள் நீக்கம்

மின்வர்த்தக தளங்களிலிருந்து 2,900 சட்டவிரோதப் பொருட்கள் நீக்கம்

2 mins read
2f7b5f68-ec4e-4658-b979-0bb4ca1eec2f
தாங்கள் வாங்கும் பொருட்களில் பாதுகாப்பு முத்திரை உள்ளதா என்று சரிபார்க்க பயனீட்டாளர்கள் ஊக்குவிக் கப்படுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இவ்­வாண்டு ஜன­வரி, நவம்­பர் மாதங்­க­ளுக்கு இடை­யில் 2,900க்கும் மேற்­பட்ட சட்­ட­வி­ரோத வீட்டு உப­யோ­கப் பொருட்­கள் உள்­ளூர் மற்­றும் வெளிநாட்டு விற்­ப­னை­யா­ளர்­களால் மின்­வர்த்­த­கத் தளங்­களில் விற்­ப­னைக்­காக பட்­டி­ய­லி­டப்­பட்­டு­உள்­ளன.

இந்த உப­க­ர­ணங்­கள் தனது அமைப்பில் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை அல்­லது ஒழுங்­கு­முறை தேவை­க­ளுக்கு ஏற்ப சரி­யான பாது­காப்பு அடை­யா­ளத்தை கொண்­டி­ருக்­க­வில்லை என்று பய­னீட்­டா­ளர் பொருள் பாது­காப்பு அலு­வ­ல­கம் நேற்று ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பால் மேற்­பார்­வை­யி­டும் பய­னீட்­டா­ளர் பொருள் பாது­காப்பு அலு­வ­ல­கம், அதன் சந்தை கண்­கா­ணிப்பு முயற்­சி­கள், பய­னீட்­டா­ளர் புகார்­கள் மீதான விசா­ர­ணை­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்த சட்டவிரோத விற்­பனை கண்­ட­றி­யப்­பட்­டது என்று மேலும் கூறி­யது.

'ஏசி அடாப்­டர்­கள்', எடுத்­துச்­செல்­லக்­கூ­டிய மின்­சார இணைப்­பான்­கள், ரொட்டி வாட்­டும் சாத­னம், இறைச்சி வாட்­டும் சாத­னம், 'ஹாட் பிளேட்­கள்' போன்ற சமை­யல் சாத­னங்­கள், சிகை பரா­ம­ரிப்பு உப­க­ர­ணங்­கள், நீர் சுடவைக்கும் கேத்தல், சுடுநீர் பெறக்கூடிய குடிநீர் சாதனங்கள் ஆகி­யவை இணை­யத்­தில் விற்­கப்­பட்ட முதல் ஐந்து வகை­யான பதிவு செய்­யப்­ப­டாத சாத­னங்­கள்.

அமே­சன், கெரோ­சல், இஸிபை, லஸாடா, க்யூ10, ஷாப்பி போன்ற முக்­கிய மின்­வர்த்­த­கத் தளங்­களில் அவை காணப்­பட்­டன.

பதி­வு­செய்­யப்­ப­டாத வீட்டு உப­யோ­கப் பொருட்­க­ளைப் பட்­டி­ய­லி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு பய­னீட்­டா­ளர் பொருள் பாது­காப்பு அலு­வ­ல­கம் மின்­வர்த்­த­கத் தளங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்றி வரு­கிறது.

இந்த இந்த சட்டவிரோத தயா­ரிப்­பு­க­ளின் விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு அப­ரா­தம் அல்­லது எச்­ச­ரிக்­கைக் கடி­தங்­க­ளை­யும் பய­னீட்­டா­ளர் பொருள் பாது­காப்பு அலு­வ­ல­கம் வழங்­கி­யுள்­ளது.

பதிவு செய்­யப்­ப­டாத கட்­டுப்­படுத்­தப்­பட்ட பொருட்­களை விற்­பனை செய்­வோ­ருக்கு $10,000 வரை அப­ரா­தம், இரண்டு ஆண்­டு­கள் வரை சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­படக்கூடும்.