சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு நேற்று உலக அளவில் நிபுணர்கள் மற்றும் அரசாங்கங்களால் சிவப்புக் குறியீடு எனும் உச்சவிழிப்பு நிலை என்று அறிவிக்கப்பட்ட மிகவும் முக்கியமான லாக்4j மென்பொருள் பாதுகாப்பு குறைபாடு குறித்த எச்சரிக்கை அளவை உயர்த்தியது.
இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் பல ஆண்டுகளில் மிக மோசமானது என்று கூறும் மென்பொருளில் உள்ள பிழையைச் சரி செய்ய இணையத்தில் ஊடுருவும் நிபுணர்கள் விரைகிறார்கள். தொலைத்தொடர்பு, போக்குவரத்து, வங்கி, நிதி உள்ளிட்ட நாட்டின் 11 முக்கிய தகவல் உள்கட்டமைப்புத் துறைகளை மேற்பார்வையிடும் எல்லா அரசு அமைப்புகளுடனும் இவ்வாரம் இரு அவசர சந்திப்புகளை நடத்தியதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

