செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
36333725-8a30-4694-9515-b91c9c29da9b
-

$7,500 மதிப்புள்ள போலி கோரிக்கைகள் சமர்ப்பித்த ஆடவர் மீது குற்றச்சாட்டுகள்

அரசாங்க நிறுவனத்தால் நடத்தப்படும் திறன் பயிற்சி திட்டத்தில் இருந்து பணம் பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட போலி கோரிக்கைகளைச் சமர்ப்பித்த ஐந்தாவது மற்றும் இறுதி நபர் இந்தச் சதித் திட்டத்தில் தனது பங்கை ஒப்புக் கொண்டுள்ளார். வர்த்தக ஆலோசனை நிறுவனமான லாயல் ரிலையன்ஸின் பயிற்றுவிப்பாளராக இருந்த மார்ஷ் டெர்ரனோவா திருச்செல்லம், 2014ல் அவர் நடத்தியதாகக் கூறப்படும் ஆறு பயிற்சிகளுக்கு பயிற்றுவிப்பாளர் கட்டண மாக நிறுவனத்திடமிருந்து கிட்டத்தட்ட $7,500 பெற்றார்.

54 வயதான அவர் தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். 47 வயது செரீன் லோ பெ வென், 57 வயது பேட்ரிக் ஹோ கோக் விங் உட்பட நான்கு பேர் முன்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் 11 வாரங்கள் முதல் 29 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று மார்ஷ் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடத்தப்படாத பயிற்சி வகுப்புகளுடன் தொடர்புடைய தவறான தகவலைச் சமர்ப்பித்ததன் மூலம், அவர்கள் சிங்கப்பூர் ஊழியரணி மேம்பாட்டு அமைப்புக்கு மொத்தம் $73,000 பண இழப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பு, இப்போது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

அதிக காலம் தங்க தானாக 'கைதான' வெளிநாட்டு பாலியல் தொழிலாளி

வெளிநாட்டு பாலியல் தொழிலாளி ஒருவர் தனது விசா காலாவதியான பிறகு சிங்கப்பூரில் தங்கியிருக்கும் நேரத்தை நீட்டிக்க ஒரு விசித்திரமான வழியைக் கண்டுபிடித்தார்.

விசாரணைகளுக்கு உதவுவதற்காக வெளிநாட்டவர் களுக்கு வழங்கப்படும் சிறப்பு அனுமதிச் சீட்டை பெறுவதற் காக சீன நாட்டவரான லியாங் கிங்லான் தானாக கைதாவதற்கு ஏற்பாடு செய்தார். பதிலுக்கு, அவர் 'தன்னைக் கைது செய்ய' ஏற்பாடு செய்த குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் அதிகாரியான டியோ ஹுவி பெங்குக்கு பாலியல் சேவைகளுடன் லஞ்சமும் வழங்கினார்.

38 வயதான லியாங்கிற்கு நேற்று 25 வார சிறைத் தண்டனையும் $8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

2018, அக்டோபர் 16ஆம் தேதியன்று, அவர் கைது செய் யப்பட்டார். மேலும் அவர் தொடர்புடைய ஆணையத்தின் விசாரணைக்கு உதவ சிங்கப்பூரில் இருக்க விரும்புகிறீர் களா என்று கேட்கப்பட்டது. லியாங்கும் ஒப்புக்கொண்டார். அவர் அதிக காலம் தங்கிய குற்றத்திற்காக அபராதம் செலுத்திய பிறகு அவருக்கு சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. டியோவின் வழக்கு நிலுவையில் உள்ளது.

மின்னிலக்க நிறுவனம் உதவி: $500,000 பறிபோவதிலிருந்து பெண் தப்பினார்

தானியக்க குரல் இயந்திரத்தில் இருந்த நபர், தான் உயர் நீதிமன்றத்திலிருந்து அழைப்பதாகவும் பணமோசடி வழக்கில் அவர் சந்தேகத்திற்குரியவர் என்றும் கூறியபோது, திருமதி மேகன் (அவரது உண்மையான பெயர் அல்ல) பீதியடைந் தார். தான் நிரபராதி என்று வலியுறுத்திய அவர் ஒருவேளை தான் அடையாள திருட்டுக்குப் பலியாகியிருக்கலாம் என்று கூறினார். டிஜிட்டல்-சொத்து வர்த்தக நிறுவனமான QCP கேபிட்டலில் கணக்கை அமைக்க முயன்றபோது அவர்கள் மோசடிப் பேர்வழிகள் என்று சந்தேகித்து அந்நிறுவனம் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றது.

திருமதி மேகன், காவல்துறையினரால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஸூம் அழைப்பு மூலம் $500,000 சம்பந்தப்பட்ட மோசடியின் விவரங்களைச் செய்தியாளர்களிடம் தெரிவித் தார். மற்றவர்கள் தனது அனுபவத்திலிருந்து கற்றுக் கொள் வார்கள் என்றும் இதுபோன்ற தந்திரங்களுக்கு பலியாக வேண்டாம் என்றும் மேகன் கேட்டுக்கொண்டார்.