சிங்கப்பூரில் பிறந்தவருக்கு சிட்டி வங்கியில் முக்கிய பொறுப்பு

சிங்கப்பூரில் பிறந்தவருக்கு சிட்டி வங்கியில் முக்கிய பொறுப்பு

1 mins read
1533e33f-3455-4e34-ae62-ff6465318459
சிட்டி வங்கியில்  20 ஆண்டுகளுக்கும் அதிக கால அனுபவம் வாய்ந்தவர் திரு மணி. படங்கள்: சிட்டி வங்கி, ராய்ட்டர்ஸ் -

உலக அளவில் மிகவும் பிரபலமான சிட்டி பேங்க், சிங்கப்பூரில் பிறந்தவரான திரு மணி கே-யை தனது உலக வாடிக்கையாளர் சேவைத் துறையின் உலகத் தலைவர் பதவிக்கு நியமித்துள்ளது. சிங்கப்பூரில் பிறந்த ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

சிட்டி வங்கியில் வேகமாக வளர்ந்துவரும் தொழில்களில் ஒன்றாக உலக வாடிக்கையாளர் சேவைத் துறை விளங்குகிறது.

திரு மணி, சிங்கப்பூரில் தங்கி இருந்தபடி உலகம் முழுவதும் செயல்படும் வங்கியின் வட்டார தலைமைத்துவ குழுக்களுடன் சேர்ந்து பணியாற்றுவார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிட்டி பிரைவேட் பேங்கின் உலகத் தலைவரான திருவாட்டி இடா லியூவின்கீழ் திரு மணி பணியாற்றுவார்.

சிட்டி வங்கியில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர் திரு மணி. அதற்கு முன்பு இவர் செய்தித் துறையில் பணியாற்றி இருந்தார்.