வீட்டு விலை கைமீறிப்போவதை தடுக்க கடிவாளம் அவசியம்

வீட்டு விலை கைமீறிப்போவதை தடுக்க கடிவாளம் அவசியம்

4 mins read
6f1118c5-6bb3-4888-9cd9-45a276c89922
-

முரசொலி

நிலவளம் அதிகம் இல்­லாத சிங்­கப்­பூ­ரில் வீடு என்பது அதன் மக்­க­ளுக்கு மிகப்பெரிய சொத்­தாக இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரின் பொது வீட­மைப்­புத் திட்டம் உலக அள­வில் மிக­வும் பிர­ப­ல­மா­னது. அது வெற்­றி­க­ர­மான ஒரு திட்­டம்.

மக்­கள்தொகை­யில் மிக­வும் அதிக அள­வி­லான மக்­கள் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள்.

சிங்­கப்­பூர் வீடு­கள் தர­மிக்­கவைகவும் உலக அள­வில் அவற்றின் விலை போட்­டித்­தி­றன் மிக்­க­தா­க­வும் இருந்துவருகின்றன. 2020 நில­வ­ரப்­படி 1.37 மில்லியன் குடி­மக்­கள், நிரந்­த­ர­வாசி குடும்பங்கள் வசிப்­ப­தாக புள்ளி­வி­வ­ரத்­துறை தெரிவிக்­கி­ற­து.

இந்த அளவு, 2010ஆம் ஆண்­டில் 1.15 மில்லி­ய­னாக இருந்­தது. கூட்­டு­ரிமை அடுக்கு வீடு­க­ளி­லும் இதர அடுக்­கு­மாடி வீடு­க­ளி­லும் வசிக்­கும் குடும்பங்­கள் விகி­தாச்­சா­ரம் 11.5%லிருந்து 16% ஆகக் கூடி இருக்­கிறது. இருந்­தா­லும் பெரும்­பா­லான குடும்பங்­கள்- அதா­வது 78.7% குடும்­பங்­கள், ஐந்­தில் நான்கு குடும்­பங்­கள் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கின்­றன. இந்த அளவு பத்து ஆண்­டு­க­ளுக்கு முன் 82.4% ஆக இருந்­தது.

மக்­கள்­தொ­கை­யில் பெரும்­பா­லா­ன­வர்­கள் வீடமைப்பு வளர்ச்­சிக் கழக அடுக்­கு­மாடி வீடு­களில் வசிக்­கி­றார்­கள். சிங்­கப்­பூ­ரின் சொத்­துச் சந்தை நிலைகவும் கட்­டிக்­காக்­கக்­கூ­டிய ஒன்­றா­க­வும் இருக்­க­வேண்­டும் என்­பதே அடிப்­படை கொள்கை.

சிங்­கப்­பூ­ரர்­களுக்கு வீடு­கள் எப்­போ­துமே எட்டக்­கூ­டிய நிலை­யில் இருக்க வேண்டும், அவை எட்டாக் கனிக ஆகி­வி­டக்கூடாது என்­பதை அர­சாங்­கம் எப்­போதும் உறுதி செய்து வரு­கிறது.

ஆனால், கொவிட்-19 கார­ண­மாக பொருளி­யல் கணி­சமா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது என்­றாலும் கூட, இங்கு தனிர் குடி­யி­ருப்பு மற்­றும் வீவக மறு­விற்­ப­னைச் சந்தை தொடர்ந்து மிக­வும் பரபரப்பாக இருந்து வரு­வது வியப்­ப­ளிக்­கிறது.

இப்­போ­தைய நில­வ­ரப்­படி பார்த்­தால், சொத்­துச் சந்­தைக்­கும் பெரிய அள­வி­லான பொரு­ளி­யல் நில­வரங்­க­ளுக்­கும் இடை­யில் ஒத்த தொடர்பு இருப்­பதா­கத் தெரி­ய­வில்லை.

இந்த இடை­வெ­ளியை அதிகரிக்­க­ விட்­டு­விட்டால் பொரு­ளி­யல் அடிப்­படை­க­ளுக்கு ஒத்­து­வ­ராத அளவுக்கு வீடு­க­ளின் விலை­கள் கூடி­வி­டக்­கூ­டிய ஒரு நிலை ஏற்­பட்­டு­வி­டும். இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பல்­வேறு விளைவு­களை­ச் சமா­ளிக்க வேண்­டிய பெரும் சுமை வரும் காலத்தில் ஏற்­பட்­டு­வி­டும்.

வீட்டு விலை­ தொடர்ந்து கூடு­வ­தால், வீடு­களை வாங்­கு­வ­தில் பொது­மக்­களும் நாட்­டம் காட்­டு­வதால் வட்டி விகி­தம் உயர்­வ­தற்கு இட­முண்டு. இது ஏற்கெனவே கண்­கூ­டான ஒன்­றா­கி­விட்­டது.

இத­னால் கடன் வாங்கி வீட்டை வாங்­கு­வோர் கடனை அடைக்க மேலும் சுமையைச் சுமக்க வேண்டி இருக்­க­லாம். இதை எல்­லாம் கருத்­தில் கொண்டுதான் தனிர் மற்­றும் வீவக மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை ஏற்­றத்தை மிதப்­ப­டுத்த அர­சாங்­கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை இப்போது நடப்­புக்­கு­கொண்டு வந்து உள்­ளது.

மொத்­த­மாகப் பார்க்­கை­யில், அந்த நட­வ­டிக்கை­களின் விளை­வாக வீடு­க­ளுக்­கான பரந்த அள­விலான தேவை மட்­டுப்­படும் என எதிர்­பார்க்­க­லாம்.

குறிப்­பாக, குடி­யி­ருப்­ப­தற்­குப் பதி­லாக முத­லீட்டுக்­காக சொத்து வாங்­கு­வோர் ஒரு­மு­றைக்கு இரு முறை யோசிக்க வேண்­டிய நிலைமை ஏற்­ப­ட­லாம்.

இது ஒரு­பு­றம் இருக்க, தனிர் மற்­றும் அரசாங்க வீடு­கள் தொடர்­பான நிதி நில­வ­ரங்­க­ளை­யும் கடுமைக்கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளின் விளை வாக மக்­கள் விவே­க­மாக நடந்­து­கொள்­வார்­கள் என்­று எதிர்பார்க்கலாம்.

தனிர், பொது மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை­தாறு­மா­றாக ஏறு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த பல நட­வடிக்­கை­களை அமல்­ப­டுத்­தும் அதே­வே­ளை­யில், புதிய தனிர், அர­சாங்க வீடு­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்­க­வும் அர­சாங்­கம் வழி­வ­கை­க­ளைச் செய்­கிறது. கூடு­மான வரை­ ஆக அதிக மக்­கள் சொந்த வீடு­க­ளைக் கொண்­டி­ருக்க வேண்­டும் என்ற குறிக்­கோளை ஒட்டி அர­சாங்­கம் வீவக மூலம் தர­மிக்க வீடு­களை மானிய விலை­யில் மக்­க­ளுக்கு வழங்கி வரு­கிறது.

அதே­வே­ளை­யில், மக்­க­ளின் எதிர்­பார்ப்பு, வரு­வாய் அதி­க­ரிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனிர் வீடு­களை­யும் அர­சாங்­கம் ஊக்கு­வித்து வரு­கிறது. இதுவே வழி­வழின அர­சாங்கக் கொள்கைக இருந்து வரு­கிறது.

இருந்தாலும், மறு­விற்­பனை சொத்­துச் சந்­தையை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கம் இப்­போது எடுக்கும் நட­வ­டிக்­கை­களை, வீடு­களை கட்டி விற்­கும் நிறு வனங்­களும் இதர நிறு­வ­னங்­களும் ஏமாற்­றத்­துடன்­தான் பார்க்­கும் என்­ப­தில் வியப்பு ஏதும் இருக்­காது.

வீடு­களை வாங்­கு­வோர் அதிக முத்திரை வரி­களைச் செலுத்த வேண்டி இருக்­கும். கடன் வாங்கு­வ­தற்­கான கட்­டுப்­பா­டு­களும் அதி­க­ரிக்­கும்.

இத­னால் அவர்­க­ளுக்­கான பொரு­ளி­யல் வாய்ப்பு­கள் குறை­யும் என்­பதை இத்­த­கைய நிறு­வ­னங்­கள் எண்­ணிப் பார்க்­கும் என்­ப­தி­லும் வியப்பு இருக்காது.

புதிய பொது மற்­றும் தனிர் வீடு­களும் வரும் ஆண்­டு­களில் தொடர்ந்து சந்­தைக்கு வரும் என்பதால் சந்­தை­யில் வீடு­கள் எந்த அள­வுக்­குத் தேவைப்­படும் என்­ப­தற்­கும் எந்த அள­விற்கு வீடுகள் கிடைக்­கும் என்­ப­தற்­கும் இடைப்­பட்ட கணக்­கீட்­டில் மாற்­றம் இடம்பெற வாய்ப்பு உண்டு.

இத்­த­கைய ஒரு சூழ்­நிலை வீட்­டின் விலையை நிர்­ண­யிப்­ப­தில் முக்­கி­ய­மான பங்­காற்­றும்.

சிங்­கப்­பூ­ரில் வீட்­டின் விலை கூடி வரு­வ­தற்கு வெளி­நாட்­டி­ன­ரும் முக்­கிய கார­ணம். சொத்­துச் சந்­தை­யில் வீடு வாங்க முதன்­மு­த­லாக வரு­வோரை­விட அத்­த­கைய வெளி­நாட்­டி­ன­ரும் மற்­ற­வர்­களும் பண­ப­ல­ம் மிக்­க­வர்­க­ளாக இருக்­க­லாம்.

ஆகையால், சந்தைக்குப் புதியவர்களைப் பாது­காப்­ப­தற்கு இப்­போ­தைய புதிய நட­வ­டிக்­கை­கள் உத­வும் என்று எதிர்­பார்க்கவும் இட­முண்டு.

விரும்­பும் ஒரு வீடு கைக்கு வர­வேண்­டு­மா­னால் அதை வாங்­கு­வ­தற்­கான வளம் ஒரு­வ­ரி­டம் இருக்­க­வேண்­டும். அந்த வளம், சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பொருள் ஈட்டும் ஆற்­றலை அடிப்­படைகக் கொண்­டிருக்க வேண்டும் என்­ப­தைச் சொல்­லித் தெரியவேண்­டி­ய­தில்லை. அர­சாங்­கம் இதற்கு முன்­பும் சொத்­துச் சந்­தையை மெதுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அமல்­படுத்தி இருக்­கிறது. இது­போன்ற நட­வடிக்­கை­களை வருங்­கா­லத்­தி­லும் நடை­மு­றைப்­படுத்த வேண்­டிய வாய்ப்­பு­களும் உண்டு.

கொவிட்-19 பொரு­ளி­யல் பாதிப்­பு­களில் இருந்து சிங்­கப்­பூ­ரர்­கள் மீண்டுவரும் ஒரு நேரத்­தில், அத்தகைய நட­வ­டிக்­கை­கள் தனியார் மற்றும் பொது வீடு மறுவிற்பனை விலை கைமீறிப்போகாமல் காக் கும் கடிவாளமாக இருக்கும். தொடர்ந்து முக்­கியத்­து­வம் வாய்ந்­த­தாக, விவே­க­மிக்­க­தா­கவே, அவ­சி­ய­மா­ன­தா­க அவை இருந்து வரும்.