காப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர் 88%

காப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டு ஊழியர் 88%

2 mins read
63901ca4-67ae-4073-8cd5-c848e20f3967
-

கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு முன் ஓமிக்ரான் பற்றி அதிகம் தெரியவேண்டும்

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­களில் 88 விழுக்­காட்­டி­னர் காப்­பூசி (பூஸ்­டர்) போட்­டுக்­கொண்டுள்ளனர்.

தங்­கு­வி­டு­தி­களில் வசிப்­போர், இதர இடங்­களில் வசிக்­கும் கட்டு­மா­னம், கடல்­துறை, பத­னீட்­டுத் தொழில்­து­றை­யைச் சேர்ந்த ஊழி­யர்­கள் ஆகி­யோர் அவர்­களில் அடங்­கு­வர்.

கொவிட்-19க்கு எதி­ரான இரண்­டா­வது தடுப்­பூ­சியைப் போட்­டுக்­கொண்­ட­தற்கு 150 நாட்­க­ளுக்­குப் பிறகு காப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள ஊழி­யர்­கள் தகுதி பெறு­கி­றார்­கள்.

வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­கான காப்­பூசி செயல்­திட்­டம் கிராஞ்சி தடுப்­பூசி நிலை­யத்­தில் அக்­டோ­பர் மாதம் தொடங்­கி­யது.

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­விடுதி ஊழி­யர்­களில் காப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­த­மும் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்­டோர் அளவும் ஏற்­கெ­னவே அதி­க­மாக இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட கட்­டுப்­பா­டு­களை மேலும் தளர்த்­து­வ­தற்கு முன் ஓமிக்­ரான் பற்றி அதிக தக­வல்­களைத் தெரிந்­து­கொள்ள வேண்டி இருக்­கிறது என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று தெரி­வித்­தார்.

அனைத்­து­லக வெளி­நாட்டு ஊழி­யர் நாள் நேற்று கொண்­டா­டப்­பட்­டது. அதற்கு முன்­ன­தாக அளித்த பேட்­டி­யில் இந்த விவ­ரங்­களை அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

சூழ்­நி­லையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

இதர சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உள்ள அளவுக்கு வெளி­நாட்டு ஊழி­யர்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பா­டும் தளர்த்­தப்­ப­டு­வது பற்றி அல்­லது வேக­மாக நிபந்­த­னை­களை தளர்த்து­வது பற்றி அமைச்சு பரி­சீ­லிக்­குமா என்று கேட்­ட­போது பாது­காப்­பான ஏற்­பாடு முக்­கி­ய­மா­னது என்­பதை டாக்­டர் டான் வலி­யு­றுத்தி­னார்.

மனி­வள அமைச்சு சென்ற ஆண்டு டிசம்­பர் முதல் கட்­டுப்­பாடு­களை அகற்ற திட்­ட­மிட்­டது. ஆனால் ஒவ்­வொரு முறை­யும் ஏதோ ஒரு தடங்­கல் ஏற்­பட்­டு­விட்­டது என்று அமைச்­சர் விளக்­கி­னார்.

டெல்டா கிருமி தொற்­றி­ய­போது கைகொண்ட அதே அணு­கு­முறையை ஓமிக்­ரான் தலை­காட்­டும் சூழ­லி­லும் தொட­ர­லாம் என்று அமைச்சு நம்­பு­வ­தாக அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

300,000 ஊழி­யர்­க­ளை­யும் ஞாயிற்­றுக்­கி­ழமை ஒரே நாளில் வெளியே செல்ல அனு­ம­தித்து ஒவ்­வொ­ரு­வ­ரும் கேளிக்கை வகை­யிலான சூழ்­நி­லையைக் கைகொண்­டால், நாம் தொற்­றில் இருந்து பாடம் கற்­றுக்­கொள்­ள­வில்லை என்­ப­தைக் குறிப்­ப­தா­கவே அது இருக்­கும் என்­றார் அமைச்­சர்.

டிசம்­பர் 3ஆம் தேதி முதல் தங்கு விடு­தி­யை­விட்டு வெளி­யேறி பொது இடங்­களுக்­குச் செல்ல மேலும் அதிக வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அனு­மதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

வாரம் 3,000 பேர் அப்­படி செல்­ல­லாம். இருந்­தா­லும்­கூட அத்­த­கைய சமூக வரு­கை­க­ளைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ளும் அளவு இன்­னும் முழு அளவை எட்­ட­வில்லை என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

சில ஊழி­யர்­கள் ஒப்­பந்த முத­லா­ளி­கள் கேட்­டுக்கொண்­ட­தற்கு இணங்க ஓய்வு நாளை கைவிட்டு மிகைநேரப் பணியை மேற்­கொள்­கி­றார்­கள்.

இப்­படிச் செய்­வ­தன் மூலம் மேலும் பணம் ஈட்டி வீட்­டுக்கு அனுப்­ப­லாம் என்­ப­தால் ஊழி­யர்­கள் இதற்கு ஒப்­புக்­கொள்­கி­றார்­கள் என்­ப­து முத­லா­ளி­கள், விடு­தி­களை நடத்­தும் நிறு­வ­னங்­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்டு உள்­ளது.