தைப்பூசம்; பால்குடம் எடுக்க டிசம்பர் 22 முதல் முன்பதிவு

தைப்பூசம்; பால்குடம் எடுக்க டிசம்பர் 22 முதல் முன்பதிவு

2 mins read
ca31ec48-e5bd-42fc-b688-0b9865d0cf97
-

சிங்­கப்­பூ­ரில் 2022 தைப்­பூ­சத் திரு­விழா ஜன­வரி 18ஆம் தேதி கொண்­டா­டப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தொற்று சூழ­லில் இரண்­டா­வது ஆண்­டாக பக்தர்கள் நடை ஊர்­வ­லம் செல்­ல­வும் காவடி எடுக்­க­வும் அனு­மதி இருக்­காது. முழு­மை­யாக கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் மட்டுமே அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயிலிலும் விழா­வி­லும் அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

பக்­தர்­கள் பால்­குட வேண்டு தலை நிறை­வேற்­ற­லாம். அது­வும், கோயி­லில் முன்­னரே தயார்­செய்து வைக்­கப்­பட்­டுள்ள பால்­கு­டங்­களை மட்­டுமே அவர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று ஏற்கெ­னவே அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­நி­லை­யில், பால்­கு­டம் எடுத்து காணிக்கை செலுத்த விரும்­பு­வோர், டிசம்­பர் 22ஆம் தேதி முதல் இணை­யம் வழி முன்­ப­திவு செய்­ய­லாம் என்று இந்து அறக்­கட்­டளை வாரி­யம், ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில் ஆகியவற்­று­டன் சேர்ந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயில் தெரி வித்­தது. மொட்டை போட விரும்பு வோர் டிசம்­பர் 29ஆம் தேதி­யன்று https://sttemple.com இணை­யத்­தளத்­தில் பதி­ய­லாம்.

பாது­காப்பை முன்­னிட்டு ஒரு குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான பால்­குட பக்­தர்­கள் மட்­டுமே கோயி­லுக்குள் அனு­ம­திக்­கப்­படு வர். முன்­ப­திவு செய்­தோர் மட்டும் அத­ற்கான சான்றுடன் கோயிலுக்­ குள் அனு­ம­திக்­கப்­படுவர்.

அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோவி­லுக்­குச் சென்று, இறை­வனைத் தரி­சிக்க விரும்­பும் இதர பக்­தர்­கள் அதற்­கான நேரத்தை இணை­யம் வழி­யாக முன்­ப­திவு செய்­து­கொள்ள வேண்­டும்.

முன்­ப­திவு இல்­லாதவர்­கள் அனு­ம­திக்­கப்­படமாட்­டார்­கள்.

கோவி­லுக்கு வெளியே பக்­தர்­கள் கூட­வும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. கோயி­லுக்கு உள்ளே அவர்­கள் பாது­காப்பு நிபந்­தனைகளுக்கு முற்­றி­லும் உட்­பட்டு நடந்­து கொள்­ள­ வேண்­டும்.

கூடு­தல் விவ­ரங்­கள் தைப்­பூ­சத் திரு­விழா நெருங்­கும் வேளை­யில் வெளி­யி­டப்­படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.