சிங்கப்பூரருக்கு சிட்டிபேங்க் வங்கியில் பெரும் பொறுப்பு

1 mins read
b52fc3f3-a117-4b53-b403-8451f3692c73
திரு மணி. படம்: சிட்டிபேங்க் -

உலக அள­வில் மிக­வும் பிர­ப­ல­மான சிட்டிபேங்க், சிங்­கப்­பூ­ரில் பிறந்­த­வ­ரான திரு மணி கே-யை தனது உலக வாடிக்­கை­யா­ளர் சேவைத் துறை­யின் உல­கத் தலை­வர் பத­வி­யில் நிய­மித்­துள்ளது. சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் இந்­தப் பத­விக்கு நிய­மிக்­கப்­ப­டு­வது இதுவே முதல் முறை.

திரு மணி, சிங்­கப்­பூ­ரில் தங்கி இருந்­த­படி உல­கம் முழு­வ­தும் செயல்­படும் வங்கியின் வட்­டார தலைமைத்­துவ குழுக்­க­ளு­டன் சேர்ந்து பணி­யாற்றுவார்.

அமெ­ரிக்­கா­வைத் தள­மா­கக் கொண்ட சிட்டி பிரை­வேட் பேங்­கின் உல­கத் தலை­வ­ரான திரு­வாட்டி இடா லியூ­வின் கீழ் திரு மணி பணி­யாற்று­வார்.

திரு மணி சிட்டிபேங்க் வங்­கி­யில் 20 ஆண்டுகளுக்­கும் அதி­க­ கால அனு­ப­வம் வாய்ந்­த­வர். அந்த வங்­கி­யின் நிறு­வன விவ­கா­ரங்­களில் 1999ல் ப­ணி­யைத் தொடங்­கிய இவர், 2003ல் அந்த வங்­கி­யின் சந்­தைத் துறை­யில் மூத்த பத­வியை மேற்­கொண்­டார்.

திரு மணி, அதற்கு முன் செய்­தித்­து­றை­யி­லும் பொது உறவு துறை ஆலோ­ச­க­ரா­க­வும் இருந்­தார்.