கொரோனா: புதிதாக 412 பேருக்கு தொற்று; ஒருவர் பலி

கொரோனா: புதிதாக 412 பேருக்கு தொற்று; ஒருவர் பலி

1 mins read
ecadeaa5-e320-4aa4-8ea4-885100638c1e
-

சிங்­கப்­பூ­ரில் வெள்­ளிக்­கி­ழமை புதி­தாக 412 பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­யா­னது.

அவர்­க­ளை­யும் சேர்த்து கொரோனா தொற்று ஏற்­பட்­ட­வர்­களின் மொத்த எண்­ணிக்கை 275,384 ஆகி­யது.

புதி­தாக கிருமி தொற்­றி­யோரில் 371 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்கள். ஆறு பேர் வெளி நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களைச் சேர்ந்­த­வர்­கள். 35 பேர் வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இப்­போது மொத்­தம் 481 பேர் மருத்­து­வ­மனைகளில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் 33 பேர் இருக்­கி­றார்­கள்.

இந்­தப் பிரி­வின் ஒட்­டு­மொத்த பய­னீட்டு விகி­தம் 46.4% ஆக இருந்­தது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக மேலும் ஒரு­வர் மாண்­டதை அடுத்து மொத்த மரண எண்­ணிக்கை 809 ஆகக்­கூடி உள்­ளது என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.

வாராந்­திர தொற்று விகி­தம் 0.63% ஆக இருந்­தது.