சிறைக்கைதிகள், முன்னாள் கைதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்க்கையில் ஒளியேற்ற உதவியதற்காக 266 சிங்கப்பூர் சிறைத்துறைத் தொண்டூழியர்
களுக்கு நீண்டகாலச் சேவை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மெய்நிகர் வடிவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் உள்துறை மற்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் ஆற்றிய உரை ஒலிபரப்பப்பட்டது.
சிறைச்சாலையின் தொண்டூழியக் கட்டமைப்பு விரிவடைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2000ஆம் ஆண்டில் 200 தொண்டூழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 2,400ஆக அதிகரித்துவிட்டது என்றார்.
சிறைக்கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளின் மறுஒருங்
கிைணப்புக்கும் மறுவாழ்வுக்கும் சமூக ஆதரவு அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
"முன்னாள் கைதிகளுடன் ஏற்
படுத்திக்கொண்ட உறவைத் தொடருவதன் மூலம் சமூகத்தில் தொண்டூழியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
அதனால்தான் சிறையிலிருந்து விடுதலையான பின்னரும்கூட அவர்களுக்கு தொண்டூழியர்களின் ஆதரவு கிடைக்கிறது," என்றார் திரு டான்.
நேற்றைய விருது விழங்கும் நிகழ்ச்சியில் 23 சமூக சேவை அமைப்புகளுக்குப் பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன. வேறுசில சமூக சேவை அமைப்புகளுக்கும் பல்வேறு இதர அமைப்புகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கைதிகள், முன்னாள் கைதிகள் ஆகியோரின் மறுவாழ்வு மற்றும் மறுஒருங்கிணைப்பு நடை
முறைக்கு உதவிநல்கியதாக அவற்றுக்கு அந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவ்வாறு பாராட்டுபெற்ற அமைப்புகளுள் இரட்சண்ய சேனையும் ஒன்று. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் சிறைச்சாலைகளுடன் பங்காளித்துவம் ஏற்படுத்திக்கொண்டு குடும்பத்தை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு இந்த அமைப்பு ஆதரவு அளித்து வருவதை திரு டான் தமது உரையில் குறிப்பிட்டார்.
சிறைத்துறை தொண்டூழியர்கள், சமூக சேவை அமைப்புகளுக்கு விருது