ேமலிருந்து தண்ணீர் ஒழுகுவதால் சில பூகிஸ் ஜங்ஷன் கடைகள் தற்காலிக மூடல்

ேமலிருந்து தண்ணீர் ஒழுகுவதால் சில பூகிஸ் ஜங்ஷன் கடைகள் தற்காலிக மூடல்

1 mins read
1017098f-50bb-4774-9006-861c99a6c717
கடைகளுக்குள் மட்டும் அல்லாது சில மின் படிக்கட்டு பகுதிகளிலும் தண்ணீர் ஒழுகி யதால் வாடிக்கை யாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த இடங்களைச் சுற்றி மறைப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. சில கடைகள் நேற்று மூடப்பட்டு இருந்தன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கட்­ட­டத்­தின் உள்ளே மேல்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள நீர்­தெ­ளிப்­பான் கரு­வி­கள் பழு­தடைந்­த­தன் கார­ண­மாக பூகிஸ் ஜங்­ஷன் கடைத்­தொ­கு­தி­யின் ஒரு பகுதி நேற்று மறைக்­கப்­பட்டு இருந்­தது.

சில கடை­களில் தண்­ணீர் ஒழு­கி­ய­தைத் தொடர்ந்து அந்­தப் பகுதி­ களை வாடிக்­கை­யா­ளர்­கள் நெருங்­கா­த­படி மறைப்­பு­கள் அமைக்­கப்­பட்டன.

தண்­ணீர் ஒழுகுவதன் கார­ண­மாக தூய்­மைப் பணி­க­ளுக்­காக சில கடை­கள் தற்­கா­லி­க­மாக மூடப்­ப­ட­லாம் என நேற்று ஃபேஸ் புக்கில் பதி­வேற்­றப்­பட்ட தக­வல் தெரி­வித்­தது.

கடைத்­தொ­கு­தி­யின் மூன்­றா­வது தளத்­தில் அமைந்­துள்ள உண­வ­கம் ஒன்­றி­னுள் வெள்­ளிக்­கி­ழமை இரவு 11 மணி­ய­ள­வில் நீர்­தெ­ளிப்­பான் ஒன்று பெயர்ந்­து­விட்­ட­தா­க­வும் அந்­தப் பதிவு குறிப்­பிட்­டது.

அங்கு மேற்­கொள்­ளப்­பட்டு வரும் குத்­த­கைப் பணி கார­ண­மாக இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தி­ருக்­க­லாம் என்­றது அத்­த­க­வல்.

இதன் கார­ண­மாக பல கடை­

க­ளுக்­கும் மின்­ப­டிக்­கட்­டு­க­ளி­லும் மேலி­ருந்து தண்­ணீர் ஒழு­கி­யது.

சில மின்­தூக்­கி­கள், நடை­பா­தைகள் ஆகி­ய­ன­வும் பாதிக்­கப்­பட்­டன.

மூன்­றா­வது தளத்­தில் இருந்து கீழ்த்­த­ளம் வரை தண்­ணீர் ஒழு­கி­யது.

தூய்­மைப் பணி­க­ளுக்­காக நேற்று சில கடை­கள் மூடப்­பட்­ட­தா­க­வும் கடைத்­தொ­கு­தி­யின் இதர வர்த்­த­கங்­கள் வழக்­கம்­போல நடை­பெ­று­வ­தா­க­வும் ஃபேஸ்புக் பதிவு தெரி­வித்­தது.

கடை ஒன்­றி­னுள் மழை பெய்­வது­போல தண்­ணீர் சர­மா­ரி­யாக ஒழு­கு­வ­தைக் காட்­டும் காணொளி ஒன்றை கண்டதாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' தெரிவித்தது.