$8.4 மி. மோசடி: 303 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை

$8.4 மி. மோசடி: 303 பேரிடம் காவல்துறை தீவிர விசாரணை

2 mins read
e2d2be46-d0be-4df7-831b-3adf4fff722c
-

தீவு முழு­வ­தும் மேற்­கொள்­ளப்­பட்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­யில் பல்­வேறு மோச­டி­கள் தொடர்­பாக 303 பேர் பிடி­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளி­டம் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

1,020க்கும் மேற்­பட்ட மோசடி வழக்­கு­களில் இவர்­கள் சம்­பந்­தப்­பட்டு இருக்­க­லாம் என்று நம்­பப்­

ப­டு­கிறது. இந்த மோச­டிச் சம்­ப­வங்­களில் $8.4 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொகையை பொது­மக்­கள் இழந்­துள்­ள­தாக காவல்­துறை நேற்று தெரி­வித்­தது.

இணைய காதல், இணைய வர்த்­த­கம், ஆள்­மா­றாட்­டம், முத­லீடு மோசடி, வேலை மோசடி மற்­றும் கடன் மோசடி ஆகி­யன தொடர்­பாக ஏரா­ள­மான புகார்­கள் பதிவு செய்­யப்­பட்டு உள்­ளன.

காவல்­து­றை­யி­டம் சிக்­கி­யோர் 15 வய­துக்­கும் 71 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். இவர்­களில் 92 பெண்­களும் அடங்­கு­வர்.

வர்த்­தக விவ­கா­ரத் துறை, ஏழு காவல்­து­றைப் பிரி­வு­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் டிசம்­பர் 3 முதல் டிசம்­பர் 17 வரை அம­லாக்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

சந்­தேக நபர்­கள் ஈடு­பட்ட மோச­டிக் குற்­றங்­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

கள்­ளப்­ப­ணத்தை நல்ல பண­மாக மாற்­றும் குற்­றத்­திற்கு 10 ஆண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை, $5,000 வரை­யி­லான அப­ரா­தம் ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

உரி­மம் இன்றி எந்­த­வி­த­மான பணம் வழங்­கல் சேவை அளிக்கும் வர்த்­த­கத்தை நடத்­து­வது சிங்­கப்­பூ­ரில் குற்­றம். இந்­தக் குற்­றத்­திற்கு $125,000க்கு மேற்­ப­டாத அப­ரா­தம் மூன்­றாண்­டு­க­ளுக்கு மேற்­ப­டாத சிறைத் தண்­டனை ஆகி­யன விதிக்­கப்­ப­ட­லாம்.

மோச­டிச் சம்­ப­வங்­களில் ஈடு­

ப­டு­வோ­ருக்கு எதி­ரா­கக் கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று காவல்­துறை தனது அறிக்­கை­யில் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.