தடையை மீறி பணிப்பெண் நியமனம்: கணவன், மனைவிக்கு சிறைத் தண்டனை

தடையை மீறி பணிப்பெண் நியமனம்: கணவன், மனைவிக்கு சிறைத் தண்டனை

1 mins read
4c23c0d9-e8f3-49a3-8ee3-115cfbccd27f
-

கடந்த 2014ஆம் ஆண்டு பணிப்­பெண்ணை ஆட­வர் ஒரு­வ­ரின் மனைவி தாக்­கி­ய­தைத் தொடர்ந்து பணிப்­பெண்ணை வேலைக்கு அமர்த்த அந்­தக் குடும்­பத்­திற்கு மனி­த­வள அமைச்சு தடை விதித்து இருந்­தது.

ஆனா­லும், சையது முக­மது பீரன் சையது அமீர் ஹம்­சா­வும் (வயது 41) அவ­ரது மனைவி சாபா பர்­வீ­னும் அந்­தத் தடையை மீறி மூன்­றாம் தரப்­பி­டம் இருந்து பணிப்­பெண்ணை வர­வ­ழைத்து இருந்­த­னர்.

இந்­தத் தக­வல் அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­விந்­து­விட்­டதை அறிந்த தம்­பதி, அந்­தப் பணிப்­பெண்ணை இந்­தோ­னீ­சி­யா­வுக்கு அனுப்­பி­விட்­ட­னர்.

இந்­தக் குற்­றத்­தின் தொடர்­பில் இந்­தி­யா­வைச் சேர்ந்த சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான சாபா பர்­வீ­னுக்கு மூன்று நாள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவ­ரது கண­வ­ருக்கு, பணிப்­பெண்ணை தமது குடும்­பத்­தில் வேலைக்கு அமர்த்­து­வது தொடர்­பாக பொய்­யான உறு­தி­மொழி அளித்த குற்­றத்­திற்­கும் சேர்த்து 36 வார சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2014ஆம் ஆண்டு தமது பணிப்­பெண்ணை வேண்­டு­மென்றே காயப்­ப­டுத்­தி­ய­தாக சாபா பர்­வீன் மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.