$2.65 பி.: ஒட்டுமொத்த விற்பனைச் சந்தை பொலிவு

$2.65 பி.: ஒட்டுமொத்த விற்பனைச் சந்தை பொலிவு

2 mins read
efa58a68-fd89-4b07-bc98-b9f83990ab36
-

ஒட்­டு­மொத்த விற்­ப­னைச் சந்தை கடந்த 12 மாதங்­களில் கொள்­ளை­நோய் சிர­மங்­க­ளை­யும் தாண்டி சிறப்­பான நிலையை எட்­டி­யுள்­ளது. ஆனால் இதே நிலை தொடரும் வாய்ப்பை புதிய சொத்­துச் சந்தை சூடு­த­ணிப்பு நட­வ­டிக்­கை­கள் குறைக்ககூடும்.

ஒட்­டு­மொத்த விற்­ப­னைச் சந்­தைக்கு இந்த ஆண்டு சிறப்­பான ஆண்டு என்று குறிப்­பி­ட­லாம். இவ்­வாண்­டில் இது­வரை $2.65 பில்­லி­யன் பெறு­மான பத்து தளங்­கள் சொத்து மேம்­பாட்­டா­ளர்­

க­ளுக்கு விற்­கப்­பட்டு உள்­ளன.

கடந்த ஆண்­டின் இதே கால­கட்­டத்­தில் நான்கு விற்­ப­னைப் பரி­வர்த்­த­னை­கள் மட்­டுமே நடந்­தன. அவற்­றின் மதிப்பு $127.3 மில்­லி­யன். இந்த மாதத்­தில் மட்­டும் $1.2 பில்­லி­யன் பெறு­மான இரண்டு சொத்­து­கள் ஒட்­டு­மொத்த விற்ப­னைத் திட்­டத்­தின்­கீழ் விற்­கப்­பட்டுள்­ளன. இவ்­வாண்டு முழு­மைக்­கும் நிறை­வேற்­றப்­பட்ட விற்­

ப­னைப் பரி­வர்த்­தனை மதிப்­பில் இது கிட்­டத்­தட்ட சரி­பாதி.

பல­த­ரப்­புப் பயன்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் நடை­பெற்ற பீஸ் செண்­டர்/பீஸ் மேன்­சன் $650 மில்­லி­யன் விற்­ப­னையே ஆகப்­பெ­ரி­யது என்­

ப­தோடு மட்­டு­மின்றி; வர்த்­த­கச் சொத்­து­க­ளின் வருங்­கா­லத்தை இந்த விற்­ப­னை பிர­கா­ச­மாக்கி உள்­ளதாகக் கூறப்படுகிறது.

மவுண்ட் எலி­ச­பெத்­தில் உள்ள ஹை பாய்ண்ட் கொண்­டோ­மி­னி­யத்தை இந்த மாதம் 9ஆம் தேதி ஹாங்­காங்­கின் ஷன் டேக் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னம் $556.7 மில்­லி­ய­னுக்கு வாங்­கி­யது. இது சதுர அடிக்கு $2,537 என்ற கணக்­கில் வரும்.

இதன்­படி, 2018 ஜூலை மாதத்­திற்­குப் பிறகு பரி­வர்த்­தனை ஆகி­யுள்ள ஆக அதிக நிலச்­சொத்து விலை இது.

ஒட்­டு­மொத்த விற்­பனை நட­

வ­டிக்கை இவ்­வாண்டு சிறப்­பாக நடை­பெற்­ற­போ­தி­லும் இதற்­கான பொன்­னான காலம் என்று கரு­தப்­பட்ட 2018 பரி­வர்த்­த­னை­க­ளைக் காட்­டி­லும் குறைவே.

அந்த ஆண்­டில் மட்­டும் இந்­தத் திட்­டத்­தின்­கீழ் $10 பில்­லி­யன் மதிப்­பி­லான பரி­வர்த்­த­னை­கள் நடை­பெற்­றன. அதற்கு முந்­திய ஆண்­டில் $8.1 பில்­லி­யன் விற்­பனை நடை­பெற்­றது.

கொள்­ளை­நோய் ஏற்­ப­டுத்­திய இடை­யூ­று­கள் கார­ண­மாக இவ்­வாண்டு கட்­டு­மா­னச் செல்­வு­கள் உயர்ந்­து­விட்­டன.

மேலும், மத்­திய வட்­டா­ரத்­திற்கு வெளியே இடம்­பெ­றும் புதிய தனி­யார் அடுக்­கு­வீட்­டுத் திட்­டங்­க­ளின் குறைந்­த­பட்ச வீட்டு அளவு 70 சதுர மீட்­ட­ரி­லி­ருந்து 85 சதுர மீட்­ட­ருக்கு அதி­க­ரித்­தி­ருப்­ப­தும் விற்­ப­னை­யில் இவ்­வாண்டு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தின. சில வட்­டா­ரங்­களில் இதன் அளவு 100 சதுர மீட்­ட­ரா­க­வும் உள்­ளது.

கஷ்­மன் அண்ட் வேக்­ஃபீல்ட் ஆய்வு நிறு­வ­னத் தலை­வர் வோங் சியன் யாங் கூறு­கை­யில், "பல்­வேறு ஒட்­டு­மொத்த விற்­ப­னைத் திட்­டங்­கள் நம்­பிக்­கை­யு­டன் தொடங்­கப்­படும் நிலை­யி­லும் சொத்து மேம்­பாட்­டா­ளர்­கள் நிலச் சொத்­து­களை வாங்­கு­வ­தில் கவ­னம் செலுத்­து­கின்­ற­னர்.

"இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் விற்­கப்­ப­டாத தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்கை 17,165க்குக் குறைந்­தது. இரண்­டாம் காலாண்­டைக் காட்­டி­லும் இது 12 விழுக்­காடு குறைவு.

"2019ஆம் ஆண்­டின் முதல் காலாண்­டில் விற்­கப்­ப­டாத சொத்­து­க­ளின் எண்­ணிக்கை உச்­சத்­தில் இருந்­த­தைக் காட்­டி­லும் தற்­போது நிலைமை மேம்­பட்டுள்­ளது. அப்­போது 37,799 தனி­யார் வீடு­கள் விற்­கப்­ப­டா­மல் இருந்தன," என்­றார்.

சொத்துச்சந்தை சூடுதணிப்பு புதிய நடவடிக்கைகளின் தாக்கம் இனி இருக்கலாம்