பொதுமக்கள் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் சிங்கப்பூரின் 500க்கும் மேற்பட்ட சட்டங்களில் இடம்பெற்றுள்ள சில வார்த்தைகள் எளிமைப்படுத்தப்பட உள்ளன.
குற்றவியல் சட்டம், அறங்காவல் சட்டம் போன்றவை 'திருத்தப்பட்ட சட்டங்களின் பதிப்பு 2020'ல் இடம்பெற்று இருக்கும். 510 சட்டங்கள் நவீன உச்சரிப்பு மொழியையும் தெளிவான விளக்கத்தையும் பெற்றிருக்கும். உதாரணமாக, 'notwithstanding' என்பது 'despite' என மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல, 'for the avoidance of doubt' என்னும் சொற்றொடர் 'to avoid doubt' என எளிமையாக்கப்பட்டு உள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய பதிப்பில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் மிகவும் துல்லியமாக இருக்கும் வகையில் மாற்றப்பட்டு உள்ளன. 'shall' என்னும் வார்த்தைக்குப் பதில் 'must' இடம்பெறும்.
பாலின அடிப்படையிலான மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன. 'chairman' என்பது 'chairperson' என்று மாற்றப்பட்டு உள்ளது.
தற்போதைய சமூகநெறிகளைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் இடம்பெறுகிறது.
மிகவும் நீண்ட சட்ட வாசகங்கள் பல துணை வாசகங்களை உள்ளடக்கியதாகப் பிரிக்கப்படும்.

