சமய உணர்வைப் புண்படுத்தும் சமூக ஊடகப் பதிவு: ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு

சமய உணர்வைப் புண்படுத்தும் சமூக ஊடகப் பதிவு: ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு

2 mins read
6399d5c0-bba0-4092-951d-dbdd03a7b7f6
-

வேண்­டு­மென்றே சமய உணர்­வைப் புண்­ப­டுத்­தும் வித­மாக 'இன்ஸ்­ட­கி­ராம் ஸ்டோ­ரீஸ்' வெளி­யிட்ட குற்­றச்­சாட்டு இன்று ஆட­வர் ஒரு­வர் மீது சுமத்­தப்­பட உள்­ளது.

இன்ஸ்­ட­கி­ரா­மில் முறை­யற்ற பதிவு வெளி­யிட்­ட­தாக ஆட­வர் ஒரு­வர் மீது கடந்த ஆண்டு ஜூன் 7, 8 தேதி­களில் பல்­வேறு புகார்­கள் வந்­த­தாக காவல்­துறை நேற்று தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

முஸ்­லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக வன்­மு­றை­யைத் தூண்­டும் விதத்­தி­லான அச்­சு­றுத்­தல் அந்­தப் பதி­வு­களில் இடம்­பெற்று இருந்­த­தா­க­வும் புகார்­களில் தெரி­விக்­கப்­பட்டு இருந்­தன.

அத­னைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 8ஆம் தேதி 19 வயது ஆட­வரை ஜூரோங் காவல்­து­றைப் பிரிவு அதி­கா­ரி­கள் கைது­செய்­த­னர்.

கணினி, மடிக்­க­ணினி, கைபேசி ஆகி­யன அவ­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டன.

தெமா­செக் பல்­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி மாண­வர் என அந்த ஆட­வரை டுவிட்­டர் பய­னா­ளர்­கள் அடை­யா­ளம் கண்­ட­தாக கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

புண்­ப­டுத்­தும் வித­மான கருத்­து­களை வெளி­யிட்ட தமது மாண­வர் மீது கடு­மை­யான நடவடிக்கை எடுக்­கப்போ வதாக அந்­தப் பல­து­றைத் தொழில்­நுட்­பக்­க­ல்லூரி தனது டுவிட்­ட­ரில் தெரி­வித்­தது.

தற்­போது 21 வய­தா­கும் அந்த ஆட­வர் மீது மேலும் இரு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட உள்­ளன. தகாத தொடர்பு மற்­றும் ஆபா­சப் படங்­களை வைத்­தி­ருந்­தது தொடர்­பான குற்­றச்­சாட்­டு­கள் அவை.

சமய உணர்­வைப் புண்­ப­டுத்­தும் நோக்­கு­டன் வேண்­டு­மென்றே மோச­மான கருத்­து­களை வெளி­யி­டும் குற்­றத்­திற்கு மூன்­றாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் இன, சமய நல்­லி­ணக்­கத்­திற்­குப் பங்­கம் ஏற்­படும் வகை­யி­லான செயல்­கள் கடு­மை­யா­ன­வை­யா­கக் கரு­தப்­படும் என்­றும் சட்­டப்­ப­டி­யான தண்­டனை அவர்­க­ளுக்­குக் கிடைக்­கும் என்­றும் காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது.