தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்த புதிய காவல்துறை குழு

தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்த புதிய காவல்துறை குழு

2 mins read
84187737-b6ab-458a-9957-f81d71c8411b
-

சிங்­கப்­பூ­ரில் உட்­கட்­ட­மைப்­பு­க­ளை­யும் முக்­கி­ய­மான நிகழ்­வு­க­ளை­யும் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­த­லில் இருந்து காப்­பாற்­றும் நோக்­கு­டன் ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்­னர் தொடங்­கப்­பட்ட காவல்­துறை சிறப்­புப் படை ஒன்று தற்­போது புதிய நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்டு வரு­கிறது.

பாது­காப்­புக் காவல் படை (ப்ரோ­காம்) இவ்­வாண்டு பிப்­ர­வ­ரி­யில் தொடங்­கிய பாது­காப்­புக் காவல் ஈடு­பாட்­டுக் குழு (பிஎஸ்­இஜி) பொது, தனி­யார் அமைப்­பு­க­ளின் வளா­கங்­களில் பாது­காப்பை மேம்­

ப­டுத்த அவற்­று­டன் இணைந்து பணி­யாற்­றும்.

அடுத்த ஆண்­டுக்­குள் இந்­தக் கூட்டு முயற்­சி­யில் சுமார் 200 அமைப்­பு­களை ஈடு­ப­டுத்த இந்­தப் புதிய குழு எண்­ணம் கொண்­டுள்­ளது.

இந்த அமைப்­பு­களில் பொது அமைப்­பு­கள் எத்­தனை, தனி­யார் அமைப்­பு­கள் எத்­தனை என்ற விவ­ரம் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும் இவற்­றில் பெரும்­பா­லா­னவை முக்­கி­ய­மான உள்­கட்­ட­மைப்­பு­கள் அல்­லது பெருங்­கூட்­டம் பங்­கேற்­கும் நிகழ்­வு­களை நடத்­து­பவை எனத் தெரிய வந்­துள்­ளது.

பாது­காப்­புக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டி­ய­வற்றை மதிப்­பி­டு­தல், கூட்­டாக சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­ப­டு­தல், பாது­காப்பை மேம்­ப­டுத்த பாவ­னைப் பயிற்­சி­களில் ஈடு­ப­டு­தல் போன்­ற­வற்றை இந்த அமைப்­பு­க­ளுக்கு பிஎஸ்­இஜி வழங்­கும்.

"இது­வரை, இந்த அமைப்­பு­களில் பாதிக்­கும் மேற்­பட்­ட­வற்­று­டன் பிஎஸ்­இஜி இணைந்து பணி­யாற்றி உள்­ளது. கரை­யோ­ரப் பூந்­தோட்­டங்­க­ளு­டன் தொடர்­பு­டைய அமைப்­பு­கள் சில­வும் அவற்­றுள் அடங்­கும்," என்று பாது­காப்­புக் காவல் படை­யின் (ப்ரோ­காம்) உதவி ஆணை­யா­ளர் தேவ்­ரா­ஜன் பாலா ஊட­கங்­க­ளி­டம் கூறி­னார்.

புதிய தொழில்­நுட்­பக் கரு­வி­களும் பாது­காப்­புக்­கா­கப் பயன்­

ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்த அவர், உணர்­க­ருவி, இயந்­திர மனி­தன் போன்­றவை தரை­வ­ழிப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வும் என்­றார்.

"காவல்­து­றைக்­குத் தொழில்­நுட்­பம் ஒரு முக்­கிய ஊக்­கு­விப்பு' அதி­கா­ரி­கள் இல்­லாத நிலை­யி­லும் கைகொ­டுக்­கக்­கூ­டி­யவை. வருங்­கா­லத்­தில் தொழில்­நுட்­பம் சார்ந்த மேலும் அதி­க­மான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­றும் என்று நம்­பு­கி­றோம்.

"ஓரி­டத்­தின் உள்­ப­குதி பாது­காப்­பாக உள்­ளதா என்­ப­தை­யும் அங்கு நெருக்­கடி ஏதே­னும் இருப்­பின் அத­னைச் சமா­ளிக்­கும் திட்­டம் அங்கு உள்­ளதா என்­ப­தை­யும் கணிப்­பது எங்­கள் பணி.

"முழுக்க முழுக்க கண்­கா­ணிப்­புப் படக்­க­ரு­வியை (சிசி­டிவி) மட்­டும் நம்­ப­மு­டி­யாது. அவை போது­மா­ன­தாக இருக்­காது. மறை­வான சில பகு­தி­கள் விடு­பட வாய்ப்பு உண்டு," என்­றும் திரு தேவ்­ரா­ஜன் விளக்­கி­னார்.

சைக்கிளோட்டிகளை வழிநடத்தும் புதிய கைபேசிச் செயலி

சைக்கிள் பாதைகளையும் பூங்கா இணைப்புகளையும் பயன்படுத்த விரும்புவோருக்கு புதிய கைபேசிச் செயலி கைகொடுக்கும். இந்த மாதத்தில் தொடங்கப்பட்ட The Ridenjoy என்னும் அந்த செயலி சிங்கப்பூர் நில ஆணை யத்தின் 'ஒன்மேப்' நிரல் முகப்புத்தோற்றத்தைக் கொண்டி ருக்கும். ஒன்மேப் சிங்கப்பூரின் அதிகாரத்துவ தேசிய வரை படம். இதனை சிங்கப்பூர் நில ஆணையம் தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. கூகல் மேப் பரிந்துரைப்பதைக் காட்டிலும் நீளமான பாதைகளை தமது செயலி பரிந்துரைக்கும் என்று The Ridenjoy செயலியின் நிறுவனர் கெல்வின் ஃபாங், 50, கூறினார்.

"நீங்கள் சாலையில் பயணம் செய்பவராக இருந்தால் கூகல் மேப் பயன்படுத்துங்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் குறிப்பாக சிறுவர்கள் சாலைகளில் சைக்கிள் ஓட்டுவதை விரும்புவதில்லை," என்று அவர் கூறினார். சைக்கிள் நிறுத்து மிடம், சைக்கிள் பழுதுபார்ப்பு நிலையம் போன்ற தகவல்களை யும் The Ridenjoy செயலியில் காணலாம் என்றார் அவர்.