கிறிஸ்மஸ் வாரயிறுதி: களைகட்டிய ஆர்ச்சர்ட் ரோடு

2 mins read
5f96b865-880a-44fe-9a34-b927fec68862
ஆர்ச்சர்ட் சாலை கடைத்தொகுதி ஒன்றில் நேற்று பிற்பகலில் காணப்பட்ட கூட்டம். படம்: ஷின்மின் -

புதிய வகை ஓமிக்­ரான் தொற்று அச்­சு­றுத்­தல் நில­வும் வேளை­யி­லும் விழாக்­கால வார­யி­று­தி­யில் ஆர்ச்­சர் சாலை கடை­கள் களை­கட்டி இருந்­தன.

பல கடைத்­தொ­கு­தி­கள் மற்­றும் உண­வ­கங்­கள் முன்பு நீண்ட வரி­சை­கள் காணப்­பட்­டன. வாடிக்­கை­யா­ளர் அதிக அள­வில் கடை­

வீ­தி­க­ளுக்கு வந்­த­தன் கார­ண­மாக கொள்­ளை­நோ­யால் தடு­மாற்­றம் கண்ட சில்­லறை சேவைத் துறைக்கு மீள்­வோம் என்ற நிம்­மதி பிறந்­துள்­ளது.

குறிப்­பாக, இயோன் ஆர்ச்­சர்ட், நீ ஆன் சிட்டி போன்ற கடைத்­தொ­கு­தி­களில் நேற்­றும் நேற்று முன்­தி­ன­மும் கூட்­டம் நிரம்பி வழிந்­தது.

கிறிஸ்­மஸ் பரி­சுப்­பொ­ருள்­களை வாங்­கு­வ­தோடு ஐந்து பேர் ஒன்­றா­கச் சேர்ந்து சாப்­பி­ட­லாம் என்று விதி­வி­லக்கை நல்­வாய்ப்­பா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர் பலர்.

அவர்­களில் சிலரை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் ெசய்­தி­யா­ளர் சந்­தித்­துப் பேசி­னார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே கடைத்­தொ­கு­தி­கள், உண­வ­கங்­கள் போன்­ற­வற்­றில் அனு­மதி உண்டு என்­ப­தால் புதிய வகைத் தொற்று பற்றி அவ்­வ­ள­வா­கக் கவ­லைப்­ப­ட­வில்லை என்று சிலர் கூறி­னர்.

கொள்­ளை­நோய்க்கு முந்­திய வழக்­க­நிலை ஏற்­ப­ட­வேண்­டும் என்று பல­ரும் விருப்­பம் தெரி­வித்­த­னர்.

விழாக்­கால வழக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக கடை­க­ளுக்­குச் செல்­வ­தாக சில­ரும் நண்­பர்­க­ளு­டன் நேரத்­தைச் செல­விட இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக்கொள்­வ­தாக வேறு­சி­ல­ரும் கூறி­னர்.

டெனிஸ் யுவென், 28, என்­னும் பெண்­மணி தமது மூன்­றாம் ஆண்டு திரு­மண நாளை நீ ஆன் சிட்­டி­யில் கொண்­டா­டி­னார். "நான் பாது­காப்­பாக உணர்­கி­றேன். தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி என்­ப­தும் அதன்­படி கடை­க­ளுக்கு வரு­வோர் தடுப்­பூசி போட்­டி­ருப்­ப­தும் வர­வேற்­கத்­தக்­கவை," என்­றார் அவர்.

கெரோ­லின் லோக், 43, என்­னும் இல்­லத்­த­ரசி, பொது­மக்­கள் பீதி­ய­டை­யத் தேவை இல்லை என்­றார். புதிய வகை கொரோனா கிரு­மி­யைக் கார­ணம் காட்டி அர­சாங்­கம் ஒன்­று­கூ­டல்­க­ளைத் தடுக்­க­வில்லை என்று அதற்கு அவர் விளக்­கம் அளித்­தார்.

அர­சாங்­கம் நட­வ­டிக்கை எடுத்­தால் மட்­டுமே நம்மை அதற்­குத் தயார்ப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

கடந்த புதன்­கி­ழமை ஆர்ச்­சர்ட் வட்­டா­ரக் கடை­க­ளுக்­குச் சென்ற இரு­வ­ரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.