உள்ளூர் கலைஞர்கள் படைக்கும் இசை நிகழ்ச்சி

2 mins read
9a2e7f47-3080-4d2c-83be-459eed89c9af
அலெமே ஃபெர்ணாண்டஸ், வேய்ன் சாண்ட்ஸ், மதில்டா டிசில்வா உட்பட உள்ளூர் கலைஞர்கள் பலர் இன்றைய இசை நிகழ்ச்சியை படைக்கின்றனர். படம்: AWWA/ Facebook -

சிங்­கப்­பூ­ரின் பிர­பல இசை அமைப்­பா­ள­ரான கிள­மெண்ட் சோவ், உள்­ளூர் இைசக் கலை­ஞர்­க­ளு­டன் சேர்ந்து இன்று இசை நிகழ்ச்­சி ஒன்றை நடத்­து­கி­றார்.

'நாங்­கள், சிரிப்­ப­தற்­கான கார­ணம்' என்ற அந்த நிகழ்ச்­சி­யின் வழி சிங்­கப்­பூர் சமூக அமைப்­பான 'ஏட­பிள்­யூ­ட­பிள்­யூஏ'வுக்­கு (AWWA) நிதி திரட்டப்­படும்.

தற்­போ­தைய கொள்­ளை­நோய் சூழ­லில் இந்த இசை நிகழ்ச்சி மனதை லேசாக்­கும் என்று கிள­மெண்ட் சோவ் ெதரி­வித்தார்.

'ஏட­பிள்­யூ­ட­பிள்­யூஏ' சமூக நல நிதி­யால் 12,000க்கும் மேற்­பட்­டோர் பல­ன­டைந்து வரு­கின்­ற­னர். மழ­லை­யர்­கள், குழந்­தை­கள், உதவி தேவைப்­படும் பெரி­யோர் உள்­ளிட்­டோருக்கு அது ஆத­ரவு அளித்து வரு­கிறது. எளி­தில் பாதிக்­கக்­ கூடிய மூத்­தோ­ருக்­கும் வரு­மா­னம் குறைந்த குடும்­பங்­க­ளுக்­கும் அந்த அமைப்பு உதவி செய்து வரு­கிறது.

கிறிஸ்­மஸ் காலக்­கட்­டத்­தில் வச­தி­யற்­ற­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்ற எண்­ணத்­தில் இசை நிகழ்ச்சி நடத்­தும் யோசனை உதித்­த­தாக கிள­மெண்ட் சோவ் கூறி­னார்.

"நான் எப்­போ­தும் ஏதா­வது ஒரு வகை­யில் உதவ வேண்­டும் என்று சிந்­தித்­துக் கொண்­டி­ருப்­பேன். அந்த வகை­யில் 'நாங்­கள், சிரிப் ­ப­தற்­கான கார­ணம்' இசை நிகழ்ச்சி தோன்­றி­யது," என்­றார் அவர்.

இசை அமைப்­பா­ள­ரான அவர், ஆரம்­பத்­தில் சிங்­கப்­பூர் கலை­ஞர்­களில் ஒரு­வ­ரான நீல் சானு­டன் சேர்ந்து பதிவு செய்­யப்­பட்ட ஐந்து பாடல்­களை அடங்­கிய தொகுப்பை வெளி­யிட விரும்­பி­னார். ஆனால் கிறிஸ்­மஸ் காலத்­திற்­குள் அதனை செய்ய முடி­ய­வில்லை.

இந்த நிலை­யில் இம்­மா­தத் தொடக்­கத்­தில் சிங்­கப்­பூர் அனைத்­து­லக அற­நி­று­வ­னத்­தின் 30வது ஆண்டு நிகழ்ச்­சி­யில் 'ஏட­பிள்­யூ­ட­பிள்­யூஏ'வின் மிஷல் இயோவை அவர் சந்­தித்­தார். அப்­போது இரு ­வ­ரது விருப்­பமும் ஒத்­து­போ­ன­தால் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்­யப்­பட்­டது.

"சிங்­கப்­பூ­ரின் மற்ற கலை­ஞர் ­க­ளு­டன் சேர்ந்து இசை நிகழ்ச்­சி­யைப் படைக்­கும் என்­னு­டைய விருப்­பத்தை அவ­ரு­டன் பகிர்ந்­து­கொண்­டேன். மிஷ­லும் நிதி திரட்ட வேண்­டிய சூழ்­நி­லை­யில் இருப்­பது குறித்து தெரிவித்தார். அப்­ப­டித்­தான் இசை நிகழ்ச்சி பிறந்­தது," என்று திரு கிள­மெண்ட் சோவ் குறிப்­பிட்­டார்.

இசை நிகழ்ச்சி 'ஏட­பிள்­யூ­ட­பிள்­யூஏ'வின் யுடி­யூப் ஒளி­வ­ழி­யாக இன்று மாலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை நேர­டி­யாக ஒளி­பரப்­பப்­ப­டு­கிறது.