மாணவர்களுக்குப் பொதுத் தளத்தில் பேசுவதற்கும் உரையாற்றுவதற்கும் வாய்ப்பளிக்கும் முயற்சியான 'பேசும் கலை வளர்ப்போம்' மாதாந்திர நிகழ்ச்சி, ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு மற்றும் இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் 27வது முறையாக இம்மாதம் 19ஆம் தேதி மெய்நிகர் வழி நடைபெற்றது.
கணக்காய்வாளர் சுல்தான் நசீரின் 'இன்றையச் சிந்தனை' அங்கத்தோடு தொடங்கிய இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ். தேவேந்திரன் பங்கேற்று சிறப்பித்தார்.
மாணவர்களுக்கு பொது வெளியில் பேச தளம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டினார்.
சிறுவயதில் தனக்கு தமிழ் கற்க வாய்ப்பில்லாமல் போனதால் தற்போது கற்று வருவதாக கூறிய அவர், நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகச் சரளமாகப் பேசுவதைப் பாராட்டினார்.
சிறப்புப்பேச்சாளர் 'ஹேஷ்-பீஸ்' அமைப்பின் நிறுவனத் தலைவர் திருமதி நஸ்ஹத் ஃபஹீமா "சமூக நல்லிணக்கத்தில் தன் பயணம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
மாணவர்கள் அஷ்மிதா, கீர்த்தனா, ஹஃபீஸ் சிக்கந்தர், இலக்கியா, ஹாஷிம் யூசுபுதீன், சஹானா கிரிஷ், சமிக்ஷ்சா கிரிஷ் மற்றும் கோத்தாரி ஷா இப்ராஹீம், ஹரி பாபு, தமீம் அன்சாரி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மூத்த சமூக அடித்தளத் தலைவரான புதிய நிலா மு. ஜஹாங்கீர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வை திருமதி நபிலா நஸ்ரின் நெறியாளுகை செய்ய திரு அ. முஹம்மது பிலால் வரவேற்று தொடக்க உரை நிகழ்த்தினார்.
மாணவர்களுக்கு மின்னிலக்க சான்றிதழ்களை திருமதி மஹ்ஜபின் பகிர்ந்தார். கவிஞர் அஷ்ரப் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவை நாடியது.
ஸூம் வழி 40 பார்வையாளர்களும் யூடியூப், ஃபேஸ்புக் வாயிலாக வெளிநாட்டினர் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
(செய்தி, படம் : அ. முஹம்மது பிலால்)

