மரினா பே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை கிடையாது

மரினா பே புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை கிடையாது

2 mins read
d6158012-5645-4477-ac6f-68a4c5720162
கொவிட்-19 அபாயத்தைக் கருத்தில் கொண்டு கூட்டம் கூடுவதைத் தவிர்க்க மரினா பேயில் நடைபெற உள்ள புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சி இடம்பெறாது.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புத்­தாண்டை முன்­னிட்டு இம்­முறை மரினா பேயில் நடை­பெ­றும் கொண்­டாட்­டத்­தில் வாண­வே­டிக்கை இடம்பெறாது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஒவ்­வோர் ஆண்­டும் வாண­

வே­டிக்­கை­யைக் கண்டு மகிழ

புத்­தாண்டு முதல் நாள் இரவு மரினா பேயில் மக்­கள் கூட்­டம் கூடும். இம்­முறை கூட்­டம் கூடு­

வ­தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19 கிருமி பர­வ­லைத் தடுக்க இந்த நட­வ­டி­க்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

மரினா பேயில் வாண­வே­டிக்கை வெடிக்கப்படாதபோதிலும் பல்­வே­று குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­களில் இடம்பெறும் வாண­வே­டிக்கையை வீட்டிலிருந்தவாறு பொதுமக்கள் பார்த்து மகிழலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூடுதல் தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது. 2005ஆம் ஆண்டில் இந்த வருடாந்திரக் கொண்டாட்டம் தொடங்கியதிலிருந்து கடந்த புத்தாண்டுக்கும் வரும் புத்தாண்டுக்கும் வாணவேடிக்கை இல்லாமல் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

"புத்­தாண்டுக் கொண்­டாட்­டத்தை தொலைக்­காட்­சி­யி­லும் இணை­யம் மூல­மா­க­வும் பொது­மக்­கள் கண்டு களிக்­க­லாம். குறிப்­பிட்ட சில வட்­டா­ரங்­களில் இடம்பெறும் வாண­வே­டிக்கை, மரினா பேயில் நடை­பெ­றும் புத்­தாண்­டுக் கொண்­டாட்­டம் ஆகி­ய­வற்றை பார்க்­க­லாம்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் ஆணை­யத்­தின் செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒளிக் காட்சி இம்­மு­றை­யும் இடம்­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த ஒளிக் காட்சி இம்­மா­தம் 1ஆம் தேதி­யன்று தொடங்­கி­யது. இம்­மா­தம் 31ஆம் தேதி இரவு வரை அது ஒவ்­வோர் இர­வும்

அவ்­வட்­டா­ரத்தை ஒளி வெள்­ளத்­தில் மூழ்­க­டிக்­கும்.

ஒரே நேரத்­தில் கூட்­டம் அலை­மோ­து­வ­தைத் தவிர்க்க இந்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஆணை­யம் கூறி­யது.

கொண்­டாட்­டம் நடத்­தப்­பட்­டா­லும் பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­துக்­கும் பாது­காப்­புக்­கும் முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.