கவனக்குறைவால் மரணம்; அடுத்த மாதம் தீர்ப்பு

கவனக்குறைவால் மரணம்; அடுத்த மாதம் தீர்ப்பு

2 mins read
14718497-1868-4c55-a413-5d93cb652200
-

கவ­னக்­கு­றை­வு­டன் நடந்­து­கொண்டு ஒரு­வ­ருக்கு மர­ணம் விளை­வித்­தது தொடர்­பான வழக்­கில் குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் ஆயு­தப் படை கேப்­டன் ஓங் லின் ஜியே­வுக்கு அடுத்த மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பயோ­னிக்ஸ் வாக­னம் ஒன்று பின்­னோக்­கிச் செலுத்­தப்­பட்­ட­போது பின்­னால் இருந்த லேண்ட் ரோவர் வாக­னம் மீது ஏறி­யது. இதன் விளை­வாக லேண்ட் ரோவர் ஓட்­டு­நர் மாண்­டார்.

இந்­தச் சம்­ப­வம் 2018ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 3ஆம் தேதி­யன்று நிகழ்ந்­தது. சம்­ப­வத்­துக்­குப் பிறகு ஓங் இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

அந்த பயோனிக்ஸ் வாகனம் ஏன் நின்றது என்று தமக்குத் தெரியாது எனத் தெரிவித்த ஓங், அதன் இடது புறமாக அதைக் கடந்து செல்லும்படி முழு­நேர தேசிய சேவை­யா­ளர் கார்ப்

ப­ரல் ஃபெர்ஸ்ட் கிளாஸ் லியூ காயுக்குத் தாம் உத்தரவிட்டதாக கூறினார்.

அந்த பயோனிக்ஸ் வாகனம் பின்னோக்கிச் செல்லும் என்று தமக்குத் தெரியாது என்று ஓங் தெரிவித்திருந்தார்.

பாது­காப்பு விதி­மு­றையை ஓங் கடைப்­பி­டிக்­கத் தவ­றிய கார­ணத்­தால் லியூ மாண்­ட­தா­கக் கடந்த மாதம் நீதி­மன்­றத்­தில் நிரூ­பிக்­கப்­பட்­டது.

தம்­மைப் பிர­தி­நி­திக்க 30 வயது ஓங் புதிய வழக்­க­றி­ஞரை நிய­மித்­துள்­ளார்.

இந்த வழக்கு தொடர்­பான தக­வல்­க­ளைத் தெரிந்­து­கொள்ள கூடு­தல் கால அவ­கா­சம் வேண்­டும் என்று ஓங்­கின் வழக்­க­றி­ஞர் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­ட­தால் அடுத்த மாதம் 21ஆம் தேதி தீர்ப்­ப­ளிக்­கப்­படும் என்று நீதி­பதி தெரி­வித்­தார்.

"தங்­க­ளுக்­குக்­கீழ் இருக்­கும் அதி­கா­ரி­க­ளின் பாது­காப்­புக்கு உயர் அதி­கா­ரி­களே பொறுப்பு. பயிற்­சி­க­ளின்­போது பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு நடந்துகொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கி­றோம்.

"கவ­னக்­கு­றை­வு­டன் செயல்­படும், பாது­காப்பு விதி­மு­றை­களை மீறும் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அல்­லது சிங்­கப்­பூர் ஆயுதப் படை­யின் ஒழுங்கு நட­வ­டிக்­கைக் கட்­ட­மைப்­பின்­கீழ் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். கவ­னக்­கு­றை­வு­டன் நடந்து­ கொண்டு மர­ணம் விளை­விக்­கும் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் ஐந்து ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.