இஸ்லாத்துக்கு எதிராகவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஒருவரை இழிவுபடுத்தும் வகையிலும் இன்ஸ்டகிராமில் கருத்து பதிவிட்ட குற்றத்துக்காக ஆடவர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயின்றுகொண்டிருந்தபோது சுன் சிகோங் இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
தொல்லை கொடுத்தது, பிறருடைய சமயத்தை இழிவுபடுத்தும் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு அவர்களின் மனதைப் புண்படுத்தியது, ஆபாசப் படங்களை வைத்திருந்தது ஆகிய குற்றங்களின் பேரில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கும் 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இஸ்லாத்துக்கு எதிராக இன்ஸ்டகிராமில் பதிவுகளைப் பதிவேற்றம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட அலுபவங்களைப் பற்றி முறையற்ற கருத்துகளையும் அவர் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஜூன் மாதம் 7ஆம் தேதியன்று பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அவர் எத்தகைய கருத்து
களைத் தெரிவித்தார் என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் மே மாதத்திலும் இரண்டு ஆபாசப் படங்களை அவர் பதிவிறக்கம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அவரது கைபேசியில் அவை
கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்
படுகிறது.
சுன் புரிந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் மிகவும் மோசமானவை என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதியன்று தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி டுவிட்டரில் பதிவிட்டது.
இன்ஸ்டகிராமில் ஒருவர் இஸ்லாத்துக்கு எதிராகக் கருத்து
களைப் பதிவு செய்துள்ளதாகவும் அக்கருத்துகள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்க காரணமாகக்கூடும் என்றும் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பல புகார்கள் வந்ததாகக் காவல்துறை கூறியது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஜூரோங் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதியன்று சுன்னைக் கைது செய்தனர்.
அவருடைய கணினியையும் கைபேசியையும் அவர்கள் பறி
முதல் செய்தனர்.
இந்நிலையில், சுன் $10,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

