சிறாருக்குத் தடுப்பூசி; மருத்துவர்கள் விளக்கம்

சிறாருக்குத் தடுப்பூசி; மருத்துவர்கள் விளக்கம்

2 mins read
5d368704-2e45-4de2-ae2c-1f18170d99aa
-

தங்­கள் பிள்­ளை­க­ளுக்குத் தடுப்பூசி போடு­வ­தால் பாதிப்பு ஏற்­ப­டுமோ என்ற ஒரு கவலை பெற்­றோ­ரி­டம் நில­வு­கிறது.

சுகா­தார அமைச்­சும் கல்வி அமைச்­சும் ஏற்­பாடு செய்த இணையக் கருத்­த­ரங்கு ஒன்­றின் மூலம் மருத்­து­வர்­கள் இதற்கு விளக்­கம் அளித்துள்ளனர்.

தடுப்­பூசி கார­ண­மாக மற்­ற­வர்­க­ளைப் போலவே சிறார்­களுக்­கும் அதே­போன்ற வேண்­டாத விளை­வு­களே ஏற்­ப­ட­லாம்.

ஊசி போட்ட இடத்­தில் வலி, லேசான தலை­வலி போன்ற அறி­கு­றி­கள் ஏற்­ப­ட­லாம். கடு­மை­யான பக்க விளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் இல்லை என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்துள்­ளனர்.

இருந்­தா­லும் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட பிறகு, மற்ற வர்களைப் போலவே இரண்டு வார காலத்­திற்குக் கடு­மை­யான உடற்­ப­யிற்­சி­களில் சிறார்­கள் ஈடு­படக்கூடாது.

ஃபைசர் தடுப்­பூ­சி­யைப் பொறுத்­த­வரை, அத­னால் சிறுமி­களி­டம் பூப்­ப­டை­தல் எந்த வகை­யி­லும் பாதிக்­கப்­ப­டாது.

எதிர்­கா­லத்­தில் கரு­வு­று­தலும் அத­னால் பாதிக்­கப்­ப­டாது என்றும் மருத்­து­வர்­கள் பெற்றோருக்கு உறுதிபட விளக்கம் அளித்து உள்ளனர்.

கடு­மை­யான ஒவ்­வாமை நோய் உள்ள சிறு­வர்­கள் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளக்கூடாது.

முதல் ஊசி­யைப் போட்­டுக்­கொண்­ட­தும் ஒவ்­வாமை ஏற்­பட்­டால் அடுத்த ஊசியைத் தவிர்த்து­விட வேண்­டும். இருந்­த­ாலும் ஆஸ்­துமா போன்ற பொது­வான பாதிப்பு இருக்­கும் சிறார்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

10 மைக்ரோகிராம் தடுப்­பூசி மருந்து, இளை­யர்­க­ளுக்குப் போடப்­படும் மருந்து அள­வுக்கு ஆற்­ற­லு­டன் இருக்­கும் என்­பது பரி­சோ­தனை மூலம் தெரி­ய­வந்து இருப்­ப­தாக மருத்­து­வர்­கள் குறிப்­பிட்டு இருக்­கி­றார்­கள்.

தங்­கள் பிள்­ளை­க­ளுக்குப் பெரி­ய­வர்­க­ளுக்­கான தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று பெற்­றோர்­கள் காத்­தி­ருக்­கக்கூடாது.

பிள்­ளை­யின் எடையை அல்­லது உரு­வத்தை அல்­லா­மல் வய­தைக் கருத்­தில்­கொண்டு மருந்­தின் அளவு நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது என்­றும் மருத்­து­வர்­கள் தெரிவித்து உள்­ள­னர்.

கொவிட்-19 கிருமி தொற்­றிய சிறார்­க­ளி­டம் இது­வரை லேசான அறி­கு­றி­களே தெரி­ய­வந்­துள்­ளன. அல்­லது அறி­கு­றி­கள் எது­வும் தெரி­ய­வ­ர­வில்லை.

இப்­படி இருக்­கை­யில் ஏன் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்டும் என்­ப­தற்கு விளக்­கம் அளித்த மருத்­து­வர்­கள், சமூ­கத்­தில் தொற்று கூடும்­போது அதிக சிறார்­கள் பாதிக்­கப்­ப­ட­லாம் என்­பதைச் சுட்­டிக்­காட்­டி­னர்.