புதிதாக வடிவமைக்கப்பட்ட விவேக தீயணைப்புத் தண்ணீர்க் குழாய் இப்போது பிரின்ஸ் எட்வர்ட் ரோட்டில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
தீயணைப்பாளர்கள் தீயணைப்புத் தண்ணீர்க் குழாயில் இருந்து தண்ணீரைப் பெற சராசரியாக ஒன்றரை நிமிடங்கள் பிடிக்கும். ஆனால் புதிய குழாய் வழி சுமார் 30 வினாடிகளிலேயே தண்ணீரைப் பெறலாம்.
புதிய விவேக தீயணைப்புத் தண்ணீர்க் குழாய் பரிசோதனை அக்டோபர் 26ஆம் தேதி தொடங்கியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் பொதுப் பயனீட்டுக் கழகமும் தெரிவித்தன. இந்த ஓராண்டு பரிசோதனை வெற்றி பெற்றால், இப்போதைய தீயணைப்பு தண்ணீர்க் குழாய்களுக்குப் பதிலாக மேலும் பல விவேக தீயணைப்புத் தண்ணீர்க் குழாய்கள் பொருத்தப்படும்.

