வேலை ஆதரவுத் திட்டம்: $400 மில்லியன் உதவி

வேலை ஆதரவுத் திட்டம்: $400 மில்லியன் உதவி

2 mins read
6c294832-387d-4a30-b6ab-de95e20a5638
-

இம்­மா­தம் 31ஆம் தேதி­யி­லி­ருந்து சுமார் 24,400 நிறு­வ­னங்­க­ளுக்கு மொத்­த­மாக 400 மில்­லி­யன் வெள்ளிக்­கும் அதி­க­மான சம்பள உத­வித்­தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் இந்த உத­வித் தொகை வழங்­கப்­படும்.

இந்த உத­வித்­தொகை, 380,000க்கும் அதி­க­மான சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளாக இருக்­கும் ஊழி­யர்­க­ளுக்கு சம்­ப­ளம் வழங்க கைகொ­டுக்­கும் என்று நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் இணைந்து வெளி­யிட்ட அறிக்கை குறிப்­பிட்­டது.

சென்ற ஆண்டு பிப்­ர­வரி மாதம் அறி­விக்­கப்­பட்ட வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் வேலை ஆத­ர­வுத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதன்­கீழ் இந்த உத­வித்­தொ­கை­யை­யும் சேர்த்து இது­வரை மொத்­தம் 28 பில்­லி­யன் வெள்­ளிக்­கும் அதி­க­மான தொகை வழங்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளாக உள்ள ஊழியர்களுக்கு மத்­திய சேம­நி­திக் கணக்­கில் மாதந்­தோ­றும் அவர்­களின் நிறு­வ­னங்­கள் கட்­டா­ய­மாக ஒரு தொகை­யைச் நிரப்பவேண்டும்.

இவ்­வாண்டு ஆகஸ்ட் முதல் அக்­டோ­பர் மாதம் வரை கொடுக்­கப்­பட்ட தேதிக்­குள் ஊழியர் மத்திய சேமநிதிக் கணக்கில் பணம் நிரப்பிய நிறுவனங்கள் இந்த உதவித் தொகைக்­குத் தகு­தி­பெறும். இம்­மாத இறு­தி­யில் வழங்­கப்­படும் உத­வித்­தொகை அந்த கால­கட்­டத்­திற்­கான சம்­ப­ளங்­க­ளுக்­கா­னது. சென்ற மாதம் ஒன்­றாம் தேதி முதல் வழங்­கப்­பட்ட சம்­ப­ளங்­க­ளுக்­கான உத­வித்ெ­தாகை, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வழங்­கப்­படும்.

தகு­தி­பெ­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு இம்­மாத இறு­தி­யில் அது குறித்து தெரி­யப்­ப­டுத்­தப்­படும். உத­வித்­தொ­கைக்­குத் தகு­திப்ெ­ப­று­வ­தைத் தெரி­விக்­கும் கடி­தத்தை myTaxPortal இணை­யத்­த­ளத்­தில் பார்க்­க­லாம்.

இம்­மா­தம் 27ஆம் தேதிக்­குள் நிறு­வ­னங்­க­ளுக்­கான 'பேனவ்' வச­திக்கு விண்­ணப்­பம் செய்­யும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­யத்­து­டன் ஜைரோ வச­தி­யைச் செய்­து­கொண்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்­கும் இம்மாதம் 31ஆம் தேதி முதல் உத­வித்­தொகை வழங்­கப்­படும். இந்த வச­தி­க­ளைச் செய்­து­கொள்­ளாத இதர நிறு­வ­னங்­கள், அடுத்த மாதம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து காசோ­லைக­ளைப் பெறும். ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளத்­திற்­கேற்ப சரி­யான தொகையை அவர்­க­ளின் மத்­திய சேம­நி­திச் சந்தா கணக்­கில் சேர்க்­க­வேண்­டி­ய­தன் முக்­கி­யத்­து­வத்தை நிதி அமைச்­சும் சிங்­கப்­பூர் உள்­நாட்டு வரு­வாய் ஆணை­ய­மும் தங்­க­ளின் அறிக்­கை­யில் வலி­யு­றுத்­தின.

நிறு­வ­னங்­கள் தங்­க­ளின் ஊழி­யர்­க­ளு­க்கு வழங்­கும் மத்­திய சேம­நி­திச் சந்தா தொகை­யைக் கருத்­தில்­கொண்டே வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின்­கீழ் வழங்­கப்­படும் உத­வித்­தொகை நிர்­ண­யிக்­கப்­படும்.

வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தைத் தவ­றா­கப் பயன்­ப­டுத்­தும் நிறு­வனங்­க­ளுக்கு உத­வித்­தொகை வழங்­கப்­ப­டாது. மேலும், குற்­ற­வியல் சட்­டத்­தின் 420வது பிரி­வின்­கீழ் அவற்­றின் முத­லா­ளி­க­ளுக்கு அதி­க­பட்­ச­மாக 10 ஆண்­டு­கள் சிறைத் தண்டனை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.