முன்னாள் சக மாணவரைக் கடத்திய குற்றச்சாட்டு நிரூபணம்

முன்னாள் சக மாணவரைக் கடத்திய குற்றச்சாட்டு நிரூபணம்

1 mins read
827c7bb8-a21f-447d-a7fa-70dde2f5dce3
-

தன்னை நேரில் சந்­திக்­கா­த­தால் திரு முக­மது ஷாமிர் நூர் முக­மது நூரை, 19 வயது ஹேரி ஹில்மி ஹரா­ஹப் ஹசான் என்­ப­வர் குத்தி, உதைத்­தி­ருக்­கி­றார். இரு­வ­ரும் முன்­ன­தாக ஒன்­றா­கப் படித்­த­வர்­கள். இச்­சம்­ப­வத்­திற்கு சுமார் ஒரு மாதத்­திற்­குப் பிறகு 20 வயது ஷாமி­ரும் அவ­ரு­டன் வேலை செய்த மூவ­ரும் வாக­னத்­தில் ஹேரி­யைக் கடத்­திச் சென்று பூங்கா ஒன்­றில் தாக்­கி­யி­ருக்­கின்­ற­னர்.

ஷாமிர் மீது சுமத்­தப்­பட்டிருந்த ஆள் கடத்தல் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டுள்ளது. சிங்­கப்­பூ­ர­ரான இவர், அந்­தக் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

ஷாமி­ருக்கு நன்­ன­டத்தை ஆணை பிறப்­பிப்­பது குறித்து உறு­தி­செய்ய நீதி­பதி அறிக்­கை­யைத் தயார்­செய்­யு­மாறு சொன்­னார்.

இவ்­வாண்டு பிப்­ர­வரி மாதம் 17ஆம் தேதி­யன்று ரெட்­ஹில் சந்­தைக்கு அருகே ஷாமிரை ஹேரி தாக்­கி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­ய­வந்­தது. மார்ச் மாதம் 19ஆம் தேதி­யன்று ஷாமி­ரும் அவ­ரின் மூன்று சக ஊழி­யர்­களும் ஹேரி­யைக் கடத்­திச் சென்று தாக்­கி­னர்.

வரும் பிப்­ர­வரி மாதம் 23ஆம் தேதி­யன்று ஷாமி­ருக்­குத் தீர்ப்­பளிக்­கப்­படும்.

ஹேரி­யின் கடத்­த­லில் ஷாமி­ரு­டன் ஈடு­பட்ட இதர மூவ­ருக்கு எதி­ரான வழக்கு விசா­ரணை நிலு­வை­யில் உள்­ளது.