நீண்டகாலத்திற்குப் பிறகு ஆசியாவில் ஜெர்மானியப் போர்க்கப்பல்

நீண்டகாலத்திற்குப் பிறகு ஆசியாவில் ஜெர்மானியப் போர்க்கப்பல்

1 mins read
eb77b5b9-ad5b-4383-b3ff-bf3b7f335fd3
சிங்கப்பூரில் இருக்கும் எஃப்ஜிஎஸ் பயர்ன் எஃப்217 போர்க்கப்பல். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜெர்­ம­னி­யின் எஃப்ஜி­எஸ் பயர்ன் எஃப்217 போர்க்­கப்­பல் சிங்­கப்­பூருக்கு வந்­துள்­ளது. சாங்கி கடற்­படைத் தளத்­தில் தற்போது இருக்­கும் இது, ஆறு மாதங்­க­ளுக்கு ஆசிய பசி­பிக் வட்­டா­ரத்­தில் இயங்­கும். 19 ஆண்­டு­களில் முதன்­முறை­யாக ஜெர்­மா­னியப் போர்க்­கப்­பல் ஒன்று இந்த வட்­டா­ரத்­திற்கு வந்துள்ளது.

இந்தப் போர்க்­கப்­பல் கிறிஸ்­மஸ், புத்­தாண்டு காலத்­தில் இரண்டு வாரங்­க­ளுக்கு சாங்கி கடற்­ப­டைத் தளத்­தில் இருக்­கும். இந்த கால­கட்­டத்­தில் இதற்­கான மேம்­பாட்­டுப் பணி­கள் மேற்ெளகொள்­ளப்­படும்.

மேலும், இதில் உள்ள 200க்கும் அதி­க­மா­னோர் ஓய்வு எடுப்­பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெர்­ம­னி­யின் வில்­லம்­ஷா­வன் நக­ரி­லி­ருந்து கிளம்­பி­யது. அதற்­குப் பிறகு தென்­சீனக் கட­லின் வழி­யாக சிங்­கப்­பூ­ருக்கு வந்­துள்­ளது. அடுத்த மாதம் தொடக்­கத்­தி­லி­ருந்­து­ ப­யர்ன் போர்க்­கப்­பல் வியட்­னாமிற்­குச் செல்­லும்.