ஏற்கெனவே பதிவு செய்த 'விடிஎல்' பயணிகளுக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு

ஏற்கெனவே பதிவு செய்த 'விடிஎல்' பயணிகளுக்கு பாதிப்பில்லை என அறிவிப்பு

2 mins read
66ccad84-1e7f-4511-a497-7db2b571538c
-

'விடி­எல்' பய­ணப் பதிவு உறுதி செய்­யப்­பட்­ட­வர்­கள் புதிய அறி­விப்­பால் பாதிக்­கப்­பட மாட்­டார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

விடி­எல் பய­ணத்­துக்கு உறு­தி­ செய்­யப்­பட்ட பய­ணி­கள் தங்­க­ளது பய­ணத்­தைத் தொட­ர­லாம் என சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நேற்று கூறி­யது.

பயண மாறு­தல் முன்­ப­திவை உறுதி செய்த பய­ணி­களும் பாதிக்­கப்­பட மாட்­டார்­கள் என்று அது தெரி­வித்­தது.

"சிங்­கப்­பூர் வழி­யாக விடி­எல் விமா­னங்­க­ளுக்­குப் பதிவு செய்­த­வர்­கள், பய­ணச்­சீட்டு விற்­ப­னைக்­குத் தடை விதிக்­கப்­பட்டுள்ள கால­கட்­டத்­தில் தாங்­கள் செல்­ல­வேண்­டிய இடத்­திற்­கான விமா­னத்­திற்­குப் பதிவு செய்­து­கொள்­ள­லாம்," என்று சிஎன்ஏ செய்தி நிறு­வ­னத்­தி­டம் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் கூறி­யது.

சிங்­கப்­பூர் வரு­வ­தற்­கான விடி­எல் பய­ணத்­துக்­கான அனைத்து புதிய விமா­னப் பய­ணப் பதி­வு­

க­ளை­யும் புதன்­கி­ழமை இரவு 11.59 மணி முதல் நிறுத்­தப்­போ­வ­தா­க­வும் 2022 ஜன­வரி 20ஆம் தேதி வரை­யி­லான எந்­த­வொரு பய­ணத்­துக்­கும் பய­ணப்­ப­திவை ஏற்­கப்­போ­வ­தில்லை என்­றும் அது குறிப்­பிட்­டது.

ஏற்­கெ­னவே பதிவு செய்­த­வர்­கள் விடி­எல் பய­ணத்­துக்­கான கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­றி­யி­ருந்­தால் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றா­மல் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம் என அது மேலும் கூறி­யது.

சிங்­கப்­பூர் ஏர்­லைன்­சும் அதன் துணை நிறு­வ­ன­மான ஸ்கூட்­டும் 20க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுக்கு விடி­எல் விமா­னங்­களை இயக்கி வரு­கிறது. இந்­தியா, மலே­சியா, இந்­தோ­னீ­சியா, தென்­கொ­ரியா, அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, சில ஐரோப்­பிய நாடு­கள் போன்­ற­வற்­றுக்­கான விமா­னங்­கள் அவை.

இந்­நி­லை­யில் ஜெட்ஸ்­டார் விமான நிறு­வ­ன­மும் ஏற்­கெ­னவே பதிவு செய்த தனது விடி­எல் பய­ணி­கள் தனிமை உத்­த­ரவை நிறை­வேற்­றா­மல் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம் என்று கூறி­யுள்­ளது.

பொது பயணச்சீட்டுக்கான தேவை அதிகரிப்பு

இதற்­கி­டையே, விடி­எல் பய­ணச்­சீட்­டு­கள் நிறுத்­தப்­ப­டு­வ­தால் பொது­வான விமா­னப் பய­ணச்­சீட்­டு­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

புதிய அறி­விப்­பைத் தொடர்ந்து நேற்று பய­ணச்­சீட்­டு­க­ளின் விற்­பனை 80 விழுக்­காடு அதி­க­ரித்­த­தாக சர­வணா டிரா­வல்ஸ் பயண நிறு­வ­னத்­தின் தலை­வர் சண்­மு­க­வேல் நாகய்­யயா சர­வ­ணன், 38, தெரி­வித்­தார்.

பய­ணச்­சீட்­டு­க­ளின் விலை­யும் ஏறி­விட்­ட­தாக சிராங்­கூன் டிரா­வல்ஸ் நிறு­வ­னத்­தின் முகம்­மது இக்­பால் கூறி­னார். விமா­னப் பய­ணத்­துக்­கான மித­மிஞ்­சிய தேவை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

கூடு­தல் செய்தி:

கி.ஜனார்த்­த­னன்