ரொட்டி, பழங்களுடன் சேர்த்து உண்ணப்படும்
மயோனைஸ் போன்ற பொருள்களில் முட்டை, பால்பொருள்களுக்கு மாற்றாக தானிய அடிப்படையிலான மூலப்பொருள்களைப் பயன்
படுத்தும் புதிய முறையை நன்யாங் தொழில்நுட்பப்
பல்கலைக்காக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
மயோனைஸ் கலவைக்கு புரதச்சத்து மிகுந்த தானியங்களைப் பயன்படுத்தி சோதித்ததாக இந்தப்
பல்கலைக்கழகத்தின்
உணவு விஞ்ஞான, தொழில்நுட்பப் பிரிவு இயக்குநர் பேராசிரியர் வில்லியன் சென் கூறினார்.
பயன்படுத்திய பார்லி வகையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது.
"சாதாரணமாக பயன்படுத்திய விதைத்தானியத்தில் புரதச்சத்து மிகுந்திருந்தாலும் உணவுத் தயாரிப்புக்கு அவை பயன்படுத்தப்படுவதில்லை. புரதச்சத்தின் கூறுகளைத் தனியே பிரித்தெடுப்பது கடினம் என்பது அதற்குக் காரணம்," என்றார் பேராசிரியர் சென்.
சைவ உணவுப் பிரியர் களுக்கு இது வரப்பிரசாதம்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 23,000 டன் பயன் படுத்தப்பட்ட பார்லி தானி யம் கிடைக்கிறது. உலகம் முழுவதும் பீர் பானம் காய்ச்சும் தொழிற்சாலைகள் 39 மில்லியன் டன் பயன்படுத்தப்பட்ட தானி யத்தை வெளியேற்று கின்றன.