மீன், காய்கறி விநியோகத்தில் பாதிப்பில்லை, விலையில் உண்டு

மீன், காய்கறி விநியோகத்தில் பாதிப்பில்லை, விலையில் உண்டு

1 mins read
4d3e5913-5dd3-4bee-805d-b2e2c109d565
காய்கறி விநியோகம் தடைப்பட்டதால் ஒரு சில வியாபாரிகள் தாய்லாந்து போன்ற வேறு நாடுகளிலிருந்து காய்கறிகளைக் கொண்டு வருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மலே­சி­யா­வைக் கடும் மழை­யும் வெள்­ள­மும் சீர­ழித்து வரும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரின் மீன், காய்­கறி விநி­யோ­கம் பாதிப்­பின்றி நடை­பெறு­வ­தாக பிர­தான விநி­யோக நிறு­வ­னங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இருப்­பி­னும் காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­துள்­ளது. மீன் விலை­யில் 20 முதல் 30 காசு ஏற்­றம் இருப்­பதை பிர­தான மீன் விநி­யோக நிறு­வ­னங்­கள் கண்­ட­றிந்­துள்­ளன. இருப்­பி­னும், அவை கூறிய கார­ணங்­கள் வேறு­பட்­டன.

மலே­சிய வெள்ள நில­வ­ரத்­தால் அங்­குள்ள மீன­வர்­கள் கட­லுக்­குச் செல்­ல­வில்லை என்­றது ஒரு தரப்பு. ஆண்­டி­றுதி மழைக்­கா­லத்­தைக் கார­ணம் காட்­டி­யது மற்­றொரு தரப்பு. வெள்­ளத்­தால் மீன் விநி­யோ­கம் 20% முதல் 30% குறைந்­துள்­ளது என்­றும் அத­னால் விற்­பனை விலை அதி­க­ரித்­துள்­ளது என்­றும் சிங்­கப்­பூர் மீன் வியா­பாரி­களின் பொதுச் சங்­கத் தலை­வர் திரு அங் ஜுவீ ஹெர்ங் கூறி­னார்.

நீ சூன் ஈஸ்ட் என்2 சந்­தை­யில் காய்­க­றிக் கடை வைத்­தி­ருக்­கும் திரு ஜெயா, 32, தம்­மு­டைய விநி­யோ­கத் தரப்பு விலை­களை 20 முதல் 30 காசு உயர்த்­தி­ய­தா­கக் கூறி­னார். அத­னால் தாம் தமது காய்­க­றி­களை 10 காசு உயர்த்­தி­ய­தா­க­வும் கூறி­னார்.

மலே­சிய வெள்­ளம் இந்­நிலைக்­குக் கார­ணம் இல்லை என்­றார் அவர். விடு­மு­றைக் காலம் என்­ப­தால் பிள்­ளை­கள் வீட்­டில் இருக்­கி­றார்­கள், குடும்­பங்­கள் சமைப்­ப­தில்லை, வெளியே சென்று சாப்­பி­டு­கிறார்­கள் என்று அவர் கூறி­னார்.

இதற்கிடையே, கடைக்­கா­ரர்­களில் பலர் முன் ஏற்­பாட்­டு­டன் இருப்­ப­தைக் காண முடி­கிறது.