பேச்சு மூச்சின்றி 48 வயது மாது ஒருவர், ஞாயிற்றுக்கிழமையன்று அப்பர் புக்கிட் தீமா சாலையோரமாக உள்ள காட்டுப் பகுதியில் கிடந்தார் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
மாது மீது கான்கிரீட் பகுதி ஒன்று விழுந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இயற்கைக்கு மாறான மரணம் ஒன்றைப் பற்றிய தகவல் காவலர்களுக்கு ஞாயிறு அன்று பகல் 12.40 மணியளவில் கிடைத்தது.
உணர்வற்ற நிலையில் இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு மாது கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதை காவலர்கள் உறுதிப்படுத்தினர்.
மரணமடைந்தவர் நான்கு பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி மெலிட்டா டோலா என்று நம்பப்படுகிறது.
திருவாட்டி மெலிட்டா மலை ஏறுவதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
'மெண்டோசா கம்போங்' என்ற கைவிடப்பட்ட கிராமம் ஒன்றைத் தேடி பலரும் இந்தக் காட்டுப் பகுதிக்குள் செல்வதாகக் கூறப்படுகிறது.
இங்கு செல்பவர்களால் இடிந்துபோன சுவர்களைக் காண முடியும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இவ்விடம் மேடும் பள்ளமுமாக இருப்பதால் மலை ஏறுவதில் அதிக அனுபவம் இல்லாதவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
மாது மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

